யாழ். நகரில் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலை வளாகத்தை, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன திறந்து வைத்தார்.
புதிய சிறைச்சாலை வளாகம், நவீன தொழில் நுட்ப வசதிகள் மற்றும் மருத்துவமனை, மற்றும் கைதிகளுக்குப் போதிய இடவசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
2.5 ஏக்கர் நிலத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய சிறைச்சாலை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
போரின் போது, யாழ்ப்பாணத்தில் இருந்த சிறைச்சாலை அழிக்கப்பட்டதையடுத்து, தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களிலேயே சிறைச்சாலை தற்காலிகமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு
31-10-2015
நீண்டகாலமாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் புதிய கட்டிடம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 10 மணிக்கு குறித்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், மற்றும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கணேசராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் அமைச்சர் திலக் மாரப்பன புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்தார்.
1938ம் ஆண்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையம் போருக்குப் பின்னர் நிரந்தர கட்டிடம் ஒன்று இல்லாத நிலையில் இயங்கி வந்தது. இந்நிலையில் 176 மில்லியன் ரூபா செலவில் குறித்த புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டித்தில் குற்றத்தடுப்பு பிரிவு, சிறிய முறைப்பாட்டு பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாபபு பிரிவு, போக்குவரத்து பிரிவு, சமூக நலன்புரி பிரிவு, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு விசேட பணியகம் ஆகியன உள்ளடங்கலாக 30 பிரிவுகள் இயங்கவுள்ளது.