மும்பை: சோட்டா ராஜனை எங்களது கையால் போட்டுத் தள்ளத் திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டு பிஜியில் சுற்றி வளைத்தோம். ஆனால் எங்களிடமிருந்து தப்பி இந்தோனேசியாவுக்கு அவர் ஓடி விட்டார்.இதனால்தான் அவர் இன்டர்போல் போலீஸில் சிக்கி விட்டார். இருந்தாலும் தாவூத் ஆதரவாளர்கள் ஓய மாட்டோம்.போட்டுத் தள்ளாமல் விட மாட்டோம் என்று இன்னொரு தாதா கும்பலின் தலைவரான சோட்டா ஷகீல் கூறியுள்ளார். மும்பையின் தாதா கும்பல் தலைவர்களில் ஒருவர்தான் சோட்டா ராஜன்.

இதேபோல இன்னொரு டான் சோட்டா ஷகீல். இருவரும் தாவூத் இப்ராகிமால் வளர்த்து விடப்பட்டவர்கள். ஆனால் ராஜன், தாவூத்தை விட்டு நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்து தனியாக வந்து விட்டார்.

அதன் பின்னர் இவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் வைத்து சிக்கி விட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ முயன்று வருகிறது.

இந்த நிலையில் சோட்டா ராஜன் சிக்க தான்தான் காரணம் என்று சோட்டா ஷகீல் எனப்படும் ஷேக் ஷகீல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

கடந்த வாரம் பிஜியில் பதுங்கியிருந்த சோட்டா ராஜனை தீர்த்துக் கட்ட எனது ஆட்கள் அங்கு போய் விட்டனர். சோட்டா ராஜனை சுற்றி வளைத்தும் விட்டனர்.
ஆனால் எங்களது பிடியிலிருந்து தப்பி அவர் இந்தோனேசியா ஓடி விட்டார். அதுதான் அவர் இன்டர்போல் போலீஸில் சிக்க முக்கியக் காரணம். இந்தக் கைதை நாங்கள் விரும்பவில்லை.
இத்தோடு முடிந்து விட்டதாக கருதக் கூடாது. இது தொடரும். அவர் கொல்லப்படும் வரை தொடரும். நான் அவரைக் கொல்வேன். எங்கு போனாலும் கொல்வேன்.இந்தியாவுக்கு அவரை அனுப்பி வைத்தாலும் நான் விட மாட்டேன். பழி தீர்ப்பேன். தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.
சோட்டாராஜன் இந்தியாவின் கைக்கூலி. அவரை இந்திய அரசு எதுவும் செய்யாது. எங்களுக்கு எதிராக இந்திய அரசுக்கு உதவி வந்தவர் ராஜன். எனவே அவரை விசாரணை என்ற பெயரில் இந்தியா எதுவுமே செய்யாது. தண்டனையும் தராது.
இந்தியா அவரை என்ன செய்தால் எங்களுக்கு என்ன. எங்களது இலக்கு மிகத் தெளிவானது. எதிரிகளைக் கொல். சோட்டா ராஜன் எங்கு போனாலும் நான் விட மாட்டேன். கொல்லாமல் ஓய மாட்டேன் என்றார் ஷகீல்.
கடந்த 2000மாவது ஆண்டு பாங்காக்கில் சோட்டா ராஜன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரைப் போட்டுத் தள்ள அங்கு மாறு வேடத்தில் ஷகீலும், அவரது கும்பலும் புகுந்தனர்.சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் ராஜன் உயிர் தப்பினார். ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக முதல் மாடியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் தாய்லாந்தை விட்டே தப்பி விட்டார்.27-1445925891-chhota-rajan-cyanide-mohan
இந்திய அரசால் வெளிநாடு ஒன்றில் பிடிக்கப்பட்டுள்ள 2 வது முக்கிய டான் சோட்டா ராஜன். இதற்கு முன்பு அபு சலேம் அன்சாரியை போர்ச்சுகலில் வைதo்து 2002ம் ஆண்டு பிடித்து 2005ம் ஆண்டு நமது நாட்டுக்கு சிபிஐ நாடு கடத்தி வந்தது நினைவிருக்கலாம்.
Share.
Leave A Reply

Exit mobile version