வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01-11-2015)மாலை வேளையில் காட்சி கொடுத்தது.
ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள், வெளிநாட்டவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.பலரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மற்றும் கைபேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
ஆலய வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மயிலானது கடந்த சில நாட்களாக திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஆனால் ,நீண்ட நாட்களின் பின்னர் ஆலய முன்றலில் குறித்த மயிலானது காட்சி கொடுப்பதாகவும், இவ்வாறான காட்சியைக் காண்பது அபூர்வமெனவும் நாள்தோறும் ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர் ஒருவர் தெரிவித்தார்.