வவுனியா ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ்ரக வாகனம் தடம் புரண்டு வீட்டுக்குள் புகுந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் புளியங்குளம், புதூர் சந்தியைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது.

hiace-02இதனால் வீட்டின் சுவர் மற்றும் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வாகனமும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

வாகனத்தில் பலர் பயணித்த போதும் சிறு காயங்களுடன் அவர்கள் உயிர்தப்பியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மணல் கடத்தல் வாகனத்தை துரத்திப் பிடித்த பொலிஸார்

கொடிகாமம், பாலாவி பகுதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தை நீண்ட தூர துரத்தலின் பின்னர் மீசாலை பகுதியில் வைத்து கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றினர்.

எனினும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்களும் தப்பித்துச் சென்றுள்ளனர்.

மணல் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் வாகனத்தை மறித்தனர். எனினும், அந்த வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றமையால் பொலிஸார் வாகனத்தை துரத்தினர்.

இதன்போது, மணல் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தில் இருந்த மணலை, சவல்கள் மூலம் பொலிஸாரின் வாகனத்தின் மீது எறிந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் முடியாத நிலையேற்பட்ட போது, வாகனத்தை கைவிட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பித்துச் சென்றனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாலாவி பகுதியில் இருந்து உழவு இயந்திரமொன்றில் மணல் கடத்திய 3 சந்தேகநபர்களையும் கொடிகாமம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version