கொல்கத்தா: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியுடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டதாக பகிரங்கமாக கூறிய இந்திய மாடல் அழகி அர்ஷி கானுக்கு, பாகிஸ்தானில் சில மத குருக்கள் பத்வா விதித்துள்ளனர்.

தானும், அப்ரிடியும் செக்ஸ் வைத்துக் கொண்டதாக டிவிட்டரில் பகிரங்கமாக கூறியிருந்தார் அர்ஷி கான். இதையடுத்து தற்போது அவருக்கு பத்வா விதித்துள்ளனர்.

 கடந்த செப்டம்பர் மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் அர்ஷி கான் போட்டிருந்த ஒரு டிவிட்டில், ஆமாம், நான் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன்.

நான் யாருடனாவது படுக்க வேண்டும் என்றால் அதற்கு இந்திய ஊடகங்களின் அனுமதியைப் பெற வேண்டுமா?.

இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என்னைப் பொறுத்தவரை அந்த உறவு காதலால் விளைந்தது என்று கூறியிருந்தார் அர்ஷி கான்.

 arshi
இந்த நிலையில்தான் அவருக்கு பாகிஸ்தானிலிருந்து பத்வா வந்துள்ளது. இதுகுறித்தும் அர்ஷி கான் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அறிவிப்பு ஏமாற்றமாக உள்ளது. எனக்கு ஆதரவாக யாரும் அங்கு குரல் கொடுக்கவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது. விழித்தெழு பாகிஸ்தான் என்று கூறியுள்ளார் அர்ஷி.
Share.
Leave A Reply

Exit mobile version