60 வயதான மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நவகத்தேகம – முல்லேகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கைதானவர் முல்லேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் அவரை பிரிந்து சென்றுள்ளார். பின்னர் தனது மகனுடன் விவசாயம் செய்து அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி சந்தேகநபர் தன்னை பலந்தமாக வீட்டு அறைக்குள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை தான் நண்பர்களுடன் மது அருந்தியமை உண்மையே எனவும் ஆனால் பெண்ணை துஷ்பிரயோகம் செய்யவில்லை எனவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இவரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version