காபுல்: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 வயது குழந்தையை கூட விட்டுவைக்காமல் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே தாலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வேறு ஆப்கானிஸ்தானில் கிளை துவங்கியுள்ளனர்.

04-1446615195-isistett-600

ஆப்கானிஸ்தானில் காலடி எடுத்து வைத்த வேகத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 வயது குழந்தைகளை கூட நிம்மதியாக விளையாட விடாமல் தீவிரவாத பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இது குறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வீடியோவின் விபரம் வருமாறு, தீவிரவாதிகள் சிறுவர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கையில் துப்பாக்கியை கொடுத்து சுடுமாறு கூறிகிறார்கள். மேலும் சிறுவனின் கையில் வெடிகுண்டை அளித்து பயிற்சி அளிக்கிறார்கள்.

13, 17 வயது சிறுவர்கள் தீவிரவாத பயிற்சி பெற்று தற்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version