வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்த பொலிஸ் அதிகாரி தன்னை 12 வயதிலிருந்து  ஏழு வருடங்களாக துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாக பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய யுவதி ஒருவர் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு வருடங்களாக பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளான சிறுமி பொத்துவில் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது தெரியவந்துள்ளது.

பொத்துவில் ரொட்டை பிரதேசத்தைச்சேர்ந்த இச்சிறுமி ஏழு வருடங்களுக்கு முன்னர் தனது 12 வயதிலே குடும்ப வறுமை காரணமாக தாய்தந்தையரின் அனுமதியுடன் வீட்டு வேலைக்கென ஒரு குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டாள்.

பின்னர் எந்த தொடர்பும் இல்லாமல் ஏழுவருடங்களாக ஒரு தனி அறைக்குள் பூட்டப்பட்டு பாலியல் ரீதியான சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்ட விடயம் தற்போதுதான் தெரியவந்துள்ளது.

12 வயதில், ஆசிரியை மற்றும் அவரது கணவன் பொலிஸ் உத்தியோகத்தருடன் வீட்டு வேலைக்காக புறப்பட்ட அந்தச்சிறுமியை அவர்கள் கொழும்பிற்கு அழைத்துச்சென்று ஆசிரியையின் கணவரான பொலிஸ் உத்தியோகத்தர் அந்த பெண்பிள்ளையை தனியறைக்குள் பூட்டி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருக்கின்றார்.

அதுமாத்திரமல்ல தனது வெறியை அந்தச்சிறுமியுடன் கழிக்கும் இவர் ஏனைய நேரங்களில் வருமானம் பெறும் நோக்குடன் ஏனையவர்களுக்கும் தன்னை விலைபேசி விற்றார் எனவும் அந்தச்சிறுமி அழுது புலம்பியிருக்கின்றார்.

அவரும் அவரது மனைவியும் 2வது மாடியில் குடும்பம் நடத்திவருகின்றார்கள் ஆனால் என்னை மாத்திரம் 3வது மாடிக்குள் போட்டு பூட்டி அவர்களுக்கு தேவை ஏற்படும் போது என்னை பயன்படுத்துவார்கள்

அதுமாத்திரமல்ல  இந்த அறைக்குள்  பிரவேசிப்பவர்கள் தனக்கு சில மாத்திரைகளை தந்து அதனை பருகும்படி சொல்லி பருக வைப்பார்கள் சிலநேரங்களில் ஊசிமூலமும் தன்னை மயக்கமடையச்செய்வார்கள் அவ்வாறு மயக்கமடைந்ததும் தனக்கு எதுவும் தெரியாது பின்னர் எழுந்து பார்க்கும்போதுதான் நான் அலங்கோலமாக இருப்பதனை என்னால் உணரமுடிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

சிலநேரங்களில் 4, 5 பேர் வரை எனதுபூட்டிய அறைக்குள் வருவார்கள் வந்து எனக்கு மாத்திரைகள் தந்து மயக்கமடையச்செய்வார்கள் இவ்வாறு நான் ஏழு வருடங்களாக இருட்டறையில் தொடர்ந்து பாலியல் வண்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன்.

பின்னர் அந்தச் சிறுமி அவர்கள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து தப்பி வந்து தற்போது பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனக்கு உண்பதற்குக்கூட உணவு கிடைப்பதில்லை அவர்கள் தரும் மாத்திரையை பருகினால் எனது வயிறு ஒரே எரிந்த வண்ணமே இருக்கும் தனது நிலை கருதி இன்னும் சில விடயங்களை அவரால் கூறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இந்த நிலைக்கு கொண்டுவந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க உரியவர்கள் முன்வந்து உதவி புரியவேண்டும் என பாதிக்கபட்டவர்களின் உறவினர்கள் சட்டத்தின் முன் கையேந்தி நிற்கின்றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version