ரஷ்யாவில் உள்ள ஓமியாகோன் என்ற கிராமம் பூமியில் மிகவும் குளிரான இடமாக, குளிரின் எல்லையை தொட்ட பகுதியாக அறியப்பட்டுள்ளது.

இந்த குளிரிலும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசித்து வருகின்றனர் என்பதுதான் இயற்கையின் முரண்பாடு.

இந்த கிராமத்தில் மற்ற மாதங்களில் குளிர்நிலை -52 0C சராசரியாக நிலவுகிறது. ஜனவரியில் துருவ குளிரான (Pole of cold) -71.20C குளிர்நிலை வரை செல்கிறது.

இதுதான் மனிதர்கள் வாழும் பகுதியிலேயே அதிக குளிர்ச்சியை எட்டியதாக 1924 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓமியாகோன் கிராமம் வட துருவ கோளார்த்தத்தை ஒட்டியுள்ளது.

இந்த கிராமத்தில் 1920 -1930 காலகட்ட கணக்குப்படி 500 பேர் வாழ்ந்தனர். கலைமான்களை மேய்த்தவர்கள் வீடுகள் அமைத்துக்கொண்டு குடியேறியுள்ளனர். இவர்கள் மான்மந்தைகள் அருந்த உறையாத வெப்ப நீரூற்றுகள் இருந்ததால் இங்கு வாழத்துவங்கினர்.

இவர்கள் இந்த குளிரோடு எவ்வளவு பழகியிருந்தாலும் மனித உடலில் ரத்த ஓட்டத்திற்கு போதுமான வெப்பநிலை அவசியம் என்பது இயற்கையின் நியதிதான்.

ஆனால், உறையும் குளிர்நிலைக்கும் கீழாக சென்றும் அவர்கள் வழக்கமான மனிதர்களை போலவே, வெதுவெதுப்பு தரும் சில ஆடைகளை மட்டும் அணிந்துகொண்டு வாழ்வது ஆச்சரியம். அந்த மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

வீடுகள், தெருவிளக்கு, மின்கம்பங்கள் என எல்லாவற்றையும் மூடிக்கிடக்கும் பனிபடலம் மனிதர்கள் வாழ ஏற்ற இடமில்லை என்பதையே காட்டுகிறது.

மனிதர்கள் முகத்திலும் பளிங்கு படலமாக அடிக்கடி பனிபடர்ந்து விடுகிறது. ஆனால், இங்கு பல காலமாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த குளிரின் காரணமாக வினோத வியாதிகள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் அவர்கள் உணவாக கலைமான்களின் இறைச்சியையும், குதிரையின் இறைச்சியையும் மட்டுமே உண்டு வாழ்கின்றனர்.

இங்கு வேறு எதுவும் விளைவதில்லை என்பதும் அதற்கு முக்கியகாரணம். ஆனாலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைவினால் உண்டாகும் நோய்கள் எதுவும் ஏற்படுவதில்லை.

சூழ்நிலைக்கேற்ப உயிரினங்களின் உடல் தகவமைப்பும் ஓரளவிற்கு தன்னை மாற்றிக்கொள்ள முடிகிறது என்பது இங்கு மெய்யாகி உள்ளது.

இங்கு கைப்பேசிகள் பயன்பட்டில் இல்லை, வீட்டில் கழிப்பறை வசதிகள் செய்துகொள்ள முடிவதில்லை, இங்கு அடிக்கடி தீமூட்டப்படுகிறது. அதுவும் அவ்வளவு எளிதல்ல. இறந்தவர்களின் உடல்கள் பூமியில் 3 அடிகளுக்கு கீழ் பள்ளங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி போன்ற எரிபொருள்களை நிரப்பி பள்ளத்தை மூடிவிட்டு சிறுதுளை வழியாக எரிக்கப்படுகிறது.

அப்படியிருந்தும் எரிந்துமுடிய 3 நாட்கள் ஆகிறது. எலும்புகள் எரிய இன்னும் பல நாட்கள் ஆகிறது. எனவே இங்கு பெரும்பாலும் இறந்தவர்கள் உடல் புதைக்கப்படுகிறது.

இவர்கள் பயன்படுத்தும் கார்களின் இஞ்சினை நிறுத்துவதில்லை. அப்படி நிறுத்தாமல் எரிபொருள் வீணாகும்படி வைத்திருக்க காரணம் மீண்டும் இந்த கடுங்குளிரில் கார் இஞ்சினை ஸ்டார்ட் செய்வது அவ்வளவு கடினம் என்பதாலே.

கார்கள் வாயு சிலிண்டர்கள் மூலமே இயங்குவதால், அதற்கான வாயு நிலையமும் இங்கு 24 மணிநேரமும் செயல்படுகிறது.

ரஷ்யாவின் ஓமியாகோனுக்கு கடந்த குளிர்காலத்தில் சென்றுவந்த நியூசிலாந்தை சேர்ந்த புகைப்படக்காரர் அமூஸ் சாப்பல் கூறியதாவது; ஓமியாகோன் நான் கற்பனை செய்ததைவிட கடுமையானதாக உள்ளது. அங்குள்ள மக்கள் யாரும் மகிழ்ச்சி மனநிலையில் இல்லை. அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.

குளிரை சமாளிக்க முழுநேர குடிப்பழக்கத்திற்கும் ஆளாகி உள்ளனர். கைகளால் கன்னத்தை தேய்த்து எப்போதும் சூடேற்றிக் கொள்கின்றனர்.

அங்கு இருக்கும் வீட்டு விலங்குகளை கவனித்துக்கொள்வதுதான் முக்கிய வேலையாக உள்ளது. தூந்திர பிரதேசத்துக்கு நிகரான சீதோஷ்ணம் அங்கு நிலவுகிறது.

சராசரியாக -50 டிகிரி குளிர்நிலை உள்ளது. ஜனவரியில் 20 டிகிரி குறைந்து -70 டிகிரியை தொடுகிறது, என்று கூறியதோடு சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

article-0-1715E996000005DC-265_964x668

Share.
Leave A Reply

Exit mobile version