மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பெணிப்பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் , துயரங்கள் சொல்லில் அடங்காதவை.

வறுமை , குடும்ப நிலை , கடன் தொல்லை மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் உட்பட பல காரணங்களுக்காக மத்திய கிழக்குக்கு செல்லும் எமது நாட்டுப் பெண்கள் , மனிதாபிமானமற்றோரால் தமது வாழ்வையே தொலைத்துவிடுகின்றனர்.

அந்த வகையில் கடன் உட்பட பிரச்சினைகளுக்காக டுபாய் நாட்டுக்கு பணியாளராக சென்ற இலங்கைப் பெண்ணொருவர் அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இவ்வாறு மரணமான பெண் இராகம – படுவத்தை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

டுபாயில் விசாக் காலம் முடிவடைந்ததும் அவர் , ஓமான் நாட்டவர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளதுடன் அங்கு தனக்கு ஏற்பட்ட சித்திரவதைகளையடுத்து அப்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் 3 மாத சுற்றுலா விசாவிலேயே டுபாய் சென்றுள்ளர். டுபாயில் அவர் பணியாற்றிய 3 மாதங்களுக்காக எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஓமானின் அப்பெண் பணியாற்றிய வீட்டில் கடும் சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

தன்னை உடனடியாக இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யும் படி அப்பெண் இலங்கையில் உள்ள தனது கணவருக்கு தெரிவித்துள்ளார்.

மருதானையில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அப்பெண் டுபாய்க்கு சென்றுள்ளார்.

அவரது கணவன் இது தொடர்பில் குறித்த முகவர் நிலையத்துக்கு அறிவித்த போதிலும் பலன் எதுவும் கிட்டவில்லை.

இறுதியில் அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் மட்டுமே குடும்பத்தினருக்கி கிடைத்துள்ளது…….

Share.
Leave A Reply

Exit mobile version