அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீது தாக்குதல்  நடத்தமுனைந்த  தமிழர்களின்  (புலம்பெயர் புலியாதரவாளர்கள்) ரவுடித் தனங்களை  கொஞ்சம் பாருங்கள்.

(இதெல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு,  அரகேற்றப்பட்டு, அதை படமெடுத்து புலம்பெயர் தேசத்து மக்களுக்கு காட்டி,  அவர்களை குஷிபடுத்த  செய்யும் சில இணையத்தளகாரர்கள் செய்யும்  செயல்கள் தான் இவை. நான்கு  காவலிகளை கூட்டிக்கொண்டு வந்து,   சுமந்திரனுக்கு எதிராக சத்தம்போட வைத்து… அதை இணையத்தளங்களில்…. பதிவேற்றி  “சுமந்திரனுக்கு எதிராக தமிழர்கள்  பாரிய (??) ஆர்ப்பாட்டம் என தலையங்கம் தீட்டி செய்தி வெளியிட்டுள்ளார்கள்.)

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைவதாக குற்றம்சுமத்தியே வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாக புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களைச் சந்திப்பதற்கும் அங்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில்,  அங்குசென்ற புலம்பெயர்   புலி உறுப்பினர்கள் சிலர் சுமந்திரனின் செயற்பாடுகள் தொடர்பாக அவரிடம் ஆவேசமாக கேள்வியெழுப்பிவாறு.. சுமந்திரனை தாக்க முற்பட்டுள்ளார்கள்.

இந்த  கூட்டங்களை (புலம்பெயர் புலியாதரவாளர்கள்) உலகநாடுகள் இன்னும் ஏன தடைபண்ணி வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த காணொளியை பார்த்தாலே புரியும்.

வெளிநாட்டில் வெள்ளைகாரர்களுக்கு  அடிமைகளாக வாழ்ந்துகொண்டு, வெள்ளைகாரன் பேசினால் வாய்பேசாமல்,  சொல்லும்  வேலைகளை தட்டாமல் செய்துகொண்டு….,

“தமிழனோடு வீரம் காட்டுவதும்,  தமிழனோடு  வாய்த்தர்க்கம் பண்ணுவதும்,  தமிழனோடு  சண்டைக்கு போவதும், குடித்துவிட்டு ரகளை செய்யமட்டுமே  தெரிந்த  ஒரு பகுத்தறிவே வளர்ச்சியடையாத   கூட்டங்கள்  கொஞ்சம்  வெளிநாடுகளில் இன்னும்  வாழந்துகொண்டிக்கிறது.

வெளிநாடுகளில் வந்திருந்தும், நாகரீகம், பண்பாடு, பெரிய மனிதர்களை எப்படி மதிக்கவேண்டும், எப்படிப்பேசவேண்டும் என்பனபோன்ற,  அறிவுபூர்வமான   அனுகுமுறைகள்  என்று  எதுவுமே தொரியாத காட்டுமிராண்டிக் கூட்டங்கள் (புலம்பெயர் புலியாதரவாளர்கள்) சுமந்திரனோடு  காட்டும்   காட்டுமிராண்டிதனங்களை   நாட்டுக்போய் காட்டுவார்களா?

நாட்டில் நடந்துமுடிந்த தேர்தல்களிலும் (புலம்பெயர் புலியாதரவு சக்திகள்) இவாகள் ஓரம்கட்டப்பட்டுள்ளார்கள், வெளிநாட்டுகாரர்களும்  இவர்களை   மதிப்பதில்லை.

sumanthiran_aus_01
புலியாதரவாளர்கள், தாங்களாக   கொடியை தலைக்குமேல்  தூக்கிகொண்டு, ஓலம் இட்டுக்கொண்டு,  கூட்டம் கூடிக்  கலைந்து போவதை தவிர வேறு எதையும் செய்யத்  தெரியாத  இந்த கூட்ங்களை,  இந்த மனிதவுலகம்  எப்பொழுதுமே   ஏற்றுக்கொள்ளபோவதில்லை.


இவாகள், நாட்டுக்கு போகும் போது  வாய்யை பொத்திக்கொண்டு போவார்கள். அங்கு போய் இந்தமாதிரியான சேட்டைகள் வைப்பார்களாக இருந்தால் சனம் அடித்தே   கலைத்துவிடும்.

Share.
Leave A Reply

Exit mobile version