சாதா­ர­ண­மாக நெற்பயிர் சுமார் ஒரு அடி அல்­லது ஒன்­றரை அடி வரை வளர்வதனையே நாம் இது வரை கண்டிருக்­கின்றோம்.

ஆனால், அந்த பயிர் ஒரு மரம் போன்று, அதுவும் 12 அடிக்கும் மேல் வளர்ந்த ஒரு மர­மாகக் காண்­பது ஆச்சரியமா­ன­தல்­லவா?

புத்­தளம் மாவட்­டத்தில் ஆன­மடு கொட்­டுக்­கச்சி பிர­தே­சத்­தி­லேயே இத்­த­கைய பிர­மாண்ட நெற்­பயிர் காணப்படுகி­றது.

ஆன­மடு கொட்­டுக்­கச்சி எத்­துன்­கொட கிரா­மத்தில் வசிக்கும் எம். தன­பால என்­ப­வரின் வீட்டுத் தோட்­டத்தில் இந்த நெற்­பயிர் காணப்­ப­டு­கி­றது.

13156pic-06பரம்­ப­ரை­ விவ­சா­யி­யான தன­பால, சுமார் ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர் தனக்குக் கிடைத்த சில விதை நெற்களை தனது வீட்டுத் தோட்­டத்தில் பதியம் போட்­டி­ருந்தார்.

இந்த நெற்­க­திர்கள் தினமும் வேக­மாக வளர ஆரம்­பித்­தன. இவற்றிலிருந்து உருவான ஒரு நெற்பயிர் சுமார் 12 அடிக­ளுக்கும் அதி­க­மான உய­ரத்­தில் வளர்ந்­துள்­ளது.

தான் தனது வாழ்­நாளில் ஒரு போதும் இவ்­வா­றான உய­ர­மான நெற்­ப­யிரைக் கண்­ட­தில்லை என கூறும் அவர், அந்த நெற்­ப­யிரைப் பாது­காப்­ப­தற்கு தன்னால் இயன்ற முறை­களைப் பயன்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இந்த நெற்­ப­யிர் மிகவும் செழிப்­பாக நெல் கதி­ரிட்­டுள்­ளதால் அந்த நெற் கதிர்­களை பற­வை­க­ளி­ட­மி­ருந்து பாதுகாக்க வீட்டில் உள்ள நுளம்பு வலை­களை தன­பால பயன்­ப­டுத்தி வரு­கிறார்.

தேசிய விதைகள் மற்றும் விவ­சாய வளங்­களைப் பாது­காக்கும் விவ­சாய சங்­கத்தின் செய­லாளர் யூ. எல். மைத்­தி­ரி­பால இந்த பிர­மாண்ட நெற்­பயிர் பற்றி கருத்து தெரி­விக்­கையில், “இந்த நெல் வகை­யா­னது “சுயமாக வளரும் நெல்” என அறி­யப்­படும் ஒர் இன­மாகும்.

இந்த நெற்­பயிர் சுமார் நான்கு வரு­டங்­க­ளுக்கு எவ்­வித இடை­யூறும் இன்றி பயன் தரக் கூடி­யது எனத் தெரி­வித்தார்.

இந்த வகை நெல்­லினை முன்னர் உணவுத் தேவை­க­ளுக்கு எடுத்துக்கொள்­ளப்­பட்ட போதும் தற்­கா­லத்தில் அந்த நெற்கள் பௌத்த பூஜை­க­ளுக்கே அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

முந்தைய காலங்களில் இவ்வாறான நெல் மரங்களை பயிரிட அதிகளவிலான நீர் தேவைப்பட்ட போதிலும் தற்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version