“இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எம்.கே.நாரா­ய­ணனைப் பிர­பா­கரன் செருப்பால் அடித்தார்” என்று, கடந்த வாரம் பல ஊட­கங்கள் பர­ப­ரப்­பான செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன.

எம்.கே.நாரா­யணன், பிர­பா­கரன் ஆகிய இரண்டு பெயர்­க­ளுமே பிர­பலம் பெற்­றவை என்­ப­துடன், இந்த இரண்டு பெயர்­க­ளுக்கும் இடையில் நீண்ட வர­லாற்றுத் தொடர்பு உள்­ளதும் கூட இந்தச் செய்தி கூடுதல் முக்­கி­யத்­துவம் பெறக் காரணம்.

ஆழ்­வார்­பேட்டை மியூசிக் அக­டமி அரங்கில், கடந்த புதன்­கி­ழமை இரவு இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எம்.கே.நாரா­ய­ணனை, “நீதாண்டா எல்­லாத்­துக்கும் காரணம்” என்று கூறி­ய­படி, 35 வய­து­டைய, அறந்­தாங்­கியைச் சேர்ந்த பிர­பா­கரன் என்ற இளைஞர் தாக்­கி­யி­ருந்தார்.

இவ­ரது பெற்றோர் 1973ஆம் ஆண்டில், மலை­ய­கத்தில் இருந்து தமிழ்­நாட்­டுக்குத் திரும்­பி­ய­வர்கள் என்று தக­வல்கள் கூறு­கின்­றன.

எம்.கே.நாரா­யணன் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்­துக்கும், இலங்­கையில் நடந்­தே­றிய சம்­ப­வங்கள் பல­வற்­றுக்கும் நிறை­யவே தொடர்­புகள் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.

இந்தத் தாக்­குதல், பலரால் விமர்­சிக்­கப்­பட்டும், கண்­டிக்­கப்­பட்டும் உள்ள போதிலும், இன்னும் பலரால் உள்­ளூர இர­சிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், அதனைப் பலரும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

‘தி ஹிந்து’ நாளிதழ் ஒழுங்கு செய்­தி­ருந்த, தமிழ்­நாட்டில் உள்ள இலங்கை அக­தி­களின் எதிர்­காலம் குறித்த கருத்­த­ரங்கில், உரை­யாற்றி விட்டு வெளி­யேறும் போது தான், எம்.கே.நாரா­யணன் மீது சர­மா­ரி­யான செருப்­படி வீழ்ந்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­திகள் ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா போன்­ற­வர்­களும் கூட செருப்பு வீச்­சுக்கு உள்ளாகியிருக்கின்­றனர். ஆனால், அவர்கள் அதி­லி­ருந்து இலா­வ­க­மாகத் தப்பிக் கொண்­டனர்.

எனினும், எம்.கே.நாரா­யணன், ஆணி செரு­கப்­பட்ட செருப்­பினால் சர­மா­ரி­யாகத் தாக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

இந்தச் சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஏனென்றால் தாக்­கப்­பட்­டவர், இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர். அதை­விட நிறை­யவே சர்ச்­சை­க­ளுக்கும் உரி­யவர் அவர்.

இந்­திய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­து­டைய அமைச்சர் ஒரு­வ­ருக்கு இணை­யான பதவி தான், தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பதவி.

2005ஆம் ஆண்டு தொடக்கம், 2010ஆம் ஆண்டு வரை அந்தப் பத­வியில் இருந்­தவர் தாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தை, இந்­தி­யாவின் பாது­காப்புத் துறை அவ்­வ­ளவு இல­கு­வாக எடுத்துக் கொள்­ளாது.

அதே­வேளை, இந்தச் சம்­ப­வத்­துக்கும், இலங்கை விவ­கா­ரத்­துக்கும் நிறை­யவே தொடர்­புகள் இருப்­ப­தாகத் தெரிகி­ன்றன.

எம்.கே.நாரா­ய­ண­னுக்கும், இலங்­கையின் கடந்த மூன்று தசாப்த கால வர­லாற்­றுக்கும் இடையில் நிறை­யவே தொடர்­புகள் உள்­ளன.

அதற்கு முன்னர் யார், இந்த எம்.கே. நாரா­யணன் என்று அறிய வேண்டும்.

கேர­ளாவின் பாலக்­காடு, ஒட்­டப்­பா­லத்தை பூர்­வீ­க­மாகக் கொண்ட, மாயன்­கோட்டே கேளத் நாரா­யணன், தான் இந்த எம்.கே.நாரா­யணன்.

சென்னை லொயொலா கல்­லூ­ரியில் படித்து விட்டு, தமிழ்­நாட்டில், பொலிஸ் சேவைக்குள் நுழைந்த இவர், 1959இல் இந்­தி­யாவின் உள்­ளகப் புல­னாய்வுப் பிரி­வுக்குள் (ஐ.பி.) உள்­வாங்­கப்­பட்டார்.

ஐ.பி. அதி­காரி என்ற வகையில், ஜவ­ஹர்லால் நேரு, இந்­திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய முன்னாள் பிரதமர்களுடன் இவ­ருக்கு நெருங்­கிய தொடர்­புகள் இருந்­தன.

நேரு குடும்­பத்தின் மீது தீவிர விசு­வாசம் கொண்­டவர் என்ற கருத்து இவர் பத­வியில் இருந்த காலத்தில் தீவிரமாக ஊட­கங்­களில் விமர்­சிக்­கப்­பட்­டது.

1987 முதல் 1990 வரை, ஐ.பி.யின் தலை­வ­ராக இருந்த இவர், பின்னர், புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் குழுவின் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றினார்.

1991 தொடக்­கத்தில், மீண்டும் ஐ.பி.யின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டு,1992 இல் ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர், 2004 மே மாதம், இந்­தியப் பிர­த­ம­ருக்­கான உள்­நாட்டுப் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக நிய­மிக்­கப்­பட்ட இவர், 2005இல் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

2010 வரை இந்தப் பத­வியில் இருந்த எம்.கே.நாரா­ணயன், பின்னர் மேற்கு வங்க ஆளு­ந­ராக நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு நரேந்­திர மோடி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், வி.ஐ.பி.களின் பய­ணங்­க­ளுக்­கான 10 ஹெலி­கொப்­டர்­களை வாங்­கு­வ­தற்கு செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பாட்டில் 330 கோடி ரூபா முறை­கேடு நடந்திருப்­ப­தாக, சி.பி.ஐ விசா­ர­ணை­களைத் தொடங்­கி­யதும், இவர் ஆளுநர் பத­வியை விட்டு வில­கினார்.

தனது பத­விக்­கா­லத்­திலும், ஓய்­வு­கா­லத்­திலும் சர்ச்­சை­க­ளுக்­கு­ரிய மனி­த­ரா­கவே எம்.கே.நாரா­யணன் இருந்திருந்தார்.

அவ­ரது பல நட­வ­டிக்­கைகள், இந்­தி­யாவின் தேசிய நல­னுக்­காக மேற்­கொள்­ளப்­பட்­டவை என்று எடுத்துக் கொண்­டாலும், இலங்கை விவ­கா­ரத்தில் அவ­ரது செயற்­பா­டுகள் கடு­மை­யான விமர்சனங்களுக்குரியவையாகவே இருந்­துள்­ளன.

தமிழ்­நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில், எம்.கே.நாரா­யணன் விச­னத்­துக்­கு­ரிய ஒருவராகவே இருந்து வந்­தி­ருக்­கிறார்.

அதற்குப் பிர­தான காரணம், இலங்கை விவ­கா­ரத்தில் அவர் நடந்து கொண்ட முறை தான்.

பொது­வா­கவே, இந்­திய அர­சாங்­கத்தில் கேர­ளாவைச் சேர்ந்த மலை­யா­ளி­க­ளான அதி­கா­ரிகள் கூடுதல் செல்வாக்குப் பெற்­ற­வர்­க­ளாக இருந்து வரு­கின்­றனர்.

சவுத் புளொக் எனப்­படும், இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கை­களைத் தீர்­மா­னிக்கும் அதி­கார வட்­டத்தில், இவர்­களின் ஆதிக்­கமே அதிகம்.

இவர்­களே இலங்கைத் தமி­ழர்­களின் நலன்­க­ளுக்கு விரோ­த­மாகச் செயற்­ப­டு­கின்­றனர் என்ற கருத்து, வலு­வா­கவே இருந்து வரு­கி­றது.

புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­யாக- -–நேரு குடும்­பத்தின் விசு­வா­சி­யாக எப்­போதும் இருந்த எம்.கே. நாரா­யணன், இலங்கைத் தமிழர் விவ­கா­ரங்­களில், இந்­தி­யாவின் கொள்­கை­களைத் தீர்­மா­னிக்கும் முக்­கி­ய­மான ஒரு­வ­ராக விளங்­கி­யி­ருந்தார்.

“1987 இல் இலங்­கைக்கு இந்­திய இரா­ணு­வத்தை அனுப்ப வேண்டும் என்ற கொள்­கையை உரு­வாக்­கி­யது, இரண்டு தனி மனி­தர்கள் தான்.

ஜே.என்.டிக்­ ஷித்தும், எம்.கே.நாரா­ய­ணனும் தான் அவர்கள்” என்று ஏசியா ரைம்ஸ் நாளி­தழில், சுதா இராமச்சந்திரன் 2004இல் எழு­தி­யி­ருந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அப்­போது, ஜே.என். டிக் ஷித், கொழும்பில் இந்­தி­யாவின் தூது­வ­ராகப் பணி­யாற்­றி­யி­ருந்தார். எம்.கே.நாரா­யணன், ஐ.பி.இன் தலை­வ­ராகப் பணியில் இருந்தார்.

ஜே.ஆரும், ராஜீவ்­காந்­தியும் செய்து கொண்ட இந்­திய – இலங்கை உடன்­பாட்­டுக்குப் பின்னர், அதனை ஏற்றுக் கொள்­ளு­மாறு விடு­தலைப் புலி­களை கட்­டா­யப்­ப­டுத்­தி­யது இந்­தியா. இதில் எம்.கே.நாரா­ய­ணனின் பங்கு முக்­கி­ய­மா­னது.

969137_348603315284470_242810511_n1987 ஜூலை 23 ஆம் திகதி விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன், சுது­ம­லையில் இருந்து அவ­ச­ர­மாக ஹெலி­கொப்டர் மூலம், சென்­னைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு, அங்­கி­ருந்து புது­டில்­லிக்கு கூட்டிச் செல்­லப்­பட்டார்.

அங்கு, உடன்­பாட்டு வரைவை பிர­பா­க­ர­னிடம் காட்டி அடுத்த இரண்டு மணி நேரத்­துக்குள் அதனை முழு­மை­யாகப் படித்து, சம்­மதம் தெரி­விக்க வேண்டும் என்று ஜே.என்.டிக் ஷித் மிரட்­டி­யி­ருந்தார்.

புது­டில்லி அசோக் ஹோட்­ட­லுக்குள் வெளி­யு­லகத் தொடர்­பு­க­ளின்றி அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பாகரனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்­தவர் அப்­போது ஐ.பி.யின் தலை­வ­ராக இருந்த எம்.கே.நாரா­யணன் தான்.

இந்தச் சம்­ப­வமே, பின்­னாளில், ராஜீவ் காந்தி கொலைக்கு பிர­தான கார­ண­மாக இருந்­தது என்ற தகவல்களும் முன்னர் வெளி­யா­கி­யி­ருந்­தன.

பின்னர், எம்.கே.நாரா­யணன் இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக இருந்த போது, கொழும்பில் இருந்த அமெ­ரிக்கத் தூதுவர், ரோபேர்ட் ஓ பிளேக், வொசிங்­ட­னுக்கு அனுப்­பிய ஒரு இரா­ஜ­தந்­திர தகவல் குறிப்பில், “எம்.கே.நாரா­யணன் விடு­தலைப் புலிகள் எதிர்ப்­பு­வாதி” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

“அவ­ருக்கு விடு­தலைப் புலி­களைப் பிடிக்­காது. பக்கச் சார்­பாக நடந்து கொண்­டவர். அவர் நடு­நிலை வகிக்­க­வில்லை” என்று ரொபேட் ஓ பிளேக் அனுப்­பிய தக­வலை விக்­கிலீக்ஸ் வெளி­யிட்­டி­ருந்­தது.

இது, விடு­தலைப் புலிகள் விட­யத்தில், எம்.கே நாரா­யணன் கொண்­டி­ருந்த நிலைப்­பாடு என்­ன­வென்­பதை புரிய வைத்­தி­ருக்கும்.

1990இல், தமிழ்­நாட்டில் பத­வியில் இருந்த தி.மு.க ஆட்சி கலைக்­கப்­ப­டு­வ­தற்கு எம்.கே.நாரா­யணன் தான் காரண­மாக இருந்தார். அப்­போதும், ஐ.பி.யின் தலை­வ­ராக இவர் பத­வியில் இருந்தார்.

கரு­ணா­நிதி அர­சாங்கம் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­வ­தாக இவர் கொடுத்த அறிக்கை தான், அப்­போது ஆட்சிக் கலைப்­புக்கு கார­ண­மா­யிற்று.

இதனால், 2005ஆம் ஆண்டு, ஜே.என்.டிக்­சிற்றின் மர­ணத்­துக்குப் பின்னர், தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக எம்.கே.நாரா­ய­ணனை நிய­மிக்க, மன்­மோ­கன்சிங் அர­சாங்கம் முனைந்த போது, அந்தக் கால­கட்­டத்தில் மத்­திய அரசில் செல்­வாக்குப் பெற்­றி­ருந்த கரு­ணா­நிதி அதற்கு கடு­மை­யாக எதிர்ப்புத் தெரி­வித்தார்.

எனினும், கரு­ணா­நி­தியின் மரு­ம­கனும், அப்­போது புது­டில்லி விவ­கா­ரங்­களைக் கையாண்­ட­வ­ரு­மான முர­சொலி மாறனை கைக்குள் போட்டுக் கொண்டு, தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை எம்.கே.நாரா­யணன் பெற்றுக் கொண்­ட­தாக ஒரு செய்தி அப்­போது உலா­வி­யது.

காங்­கிரஸ் அரசைக் காப்­பாற்­று­வ­தற்­காக, தி.மு.க.வை சிக்­க­வைப்­ப­திலும், நெருக்­க­டிக்­குள்­ளாக்­கு­வ­திலும், எம்.கே. நாரா­ணயன் அவ்­வப்­போது பல திரு­கு­தா­ளங்­களை மேற்­கொண்டு வந்­த­தாக, தி.மு.க வட்­டா­ரங்­களில் பேசப்­பட்டு வந்­தது.

முல்லைப் பெரி­யாறு விவ­காரம், கனி­மொ­ழியை விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்­திய விவ­காரம், தயா­நிதி மாறனை வெளி­யேற்­றிய விவ­காரம் ஆகி­ய­வற்றில் இவ­ரது பங்கை குறிப்­பிட்டுச் சொல்­லலாம்.

அதே­வேளை, இந்­தி­ரா­காந்தி, ராஜீவ்­காந்தி, சோனியா காந்தி என்று என்று நேரு குடும்­பத்தின் வாரிசு அரசியலுக்கு துணை­போ­கின்ற ஒரு­வ­ரா­கவே இருந்து வந்த எம்.கே.நாரா­யணன், ராஜீவ்­காந்தி கொலை வழக்கின் முக்­கிய ஆதாரம் ஒன்றை மறைத்­தவர் என்ற குற்­றச்­சாட்­டையும் எதிர்­நோக்க நேரிட்­டது.

சி.பி.ஐ.இன் முன்னாள் அதி­கா­ரி­யான கே.ரகோத்­தமன் தான் இந்தக் குற்­றச்­சாட்டை சுமத்­தி­யி­ருந்தார்.

ராஜீவ் கொலை வழக்கை விசா­ரித்த சிறப்பு புல­னாய்வு குழுவின் தலைமை விசா­ரணை அதி­கா­ரி­யாக இருந்த கே.ரகோத்­தமன், ஓய்­வு­பெற்ற பின்னர் எழு­திய “ராஜீவைக் கொல்ல நடந்த சதி: சி.பி.ஐ. ஆவ­ணங்­களில் இருந்து’ ,(Conspiracy to kill Rajiv Gandhi – From CBI files) என்ற நூலி­லேயே இந்தப் பர­ப­ரப்­பான குற்­றச்­சாட்டை முன்­வைத்தார்.

“ஸ்ரீபெ­ரும்­பு­தூரில் தேர்தல் கூட்­டத்தில் ராஜீவ்­காந்தி படு­கொலை செய்­யப்­பட்ட அடுத்த நாள், ஐ.பி.யின் தலைவராக இருந்த எம்.கே. நாரா­யணன், அப்­போ­தைய இந்­தியப் பிர­தமர் சந்­தி­ர­சே­க­ருக்கு வீடியோ ஆதாரம் தொடர்­பாக ஒரு கடிதம் எழு­தி­யுள்ளார்.

அந்தக் கடி­தத்தில், “ராஜீவ் காந்தி பங்­கேற்ற கூட்­டத்தின் பாது­காப்பு ஏற்­பா­டுகள் மோச­மாக இருந்­தன. அங்கு தடுப்­புகள் சரி­யாக அமைக்­கப்­ப­ட­வில்லை.

பொது­மக்கள் பகு­தி­யி­லி­ருந்து பாது­காக்­கப்­பட்ட பகு­திக்கு யாரும் வரு­வ­தற்கு வாய்ப்­புகள் இருந்­தன.

கொலை­யாளி (தனு) பாது­காக்­கப்­பட்ட பகு­திக்கு, ராஜீவ் காந்தி வரும்­போது தான் வந்­தாரா அல்­லது அவரைவரவேற்க நின்­றி­ருந்­த­வர்­க­ளுடன் ஏற்­க­னவே இருந்­தாரா என்­பது குறித்து தெரி­ய­வில்லை.

இது தொடர்­பான வீடியோ ஆதாரம் இப்­போது ஆய்வு செய்­யப்­பட்டு வரு­கி­றது.

அந்த கொலை­யா­ளியை அடை­யாளம் காண்­ப­தற்­கான முயற்­சி­களும் நடை­பெற்று வரு­கின்­றன” என்று அந்தக் கடி­தத்தில் எம்.கே.நாரா­யணன் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், இந்த வீடி­யோ­ஆ­தாரம் தொடர்­பாக சிறப்பு புல­னாய்வுக் குழு­வி­ன­ரிடம் எம்.கே. நாரா­யணன் தகவல் தெரி­விக்­க­வில்லை” என்று ரகோத்­தமன் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

வர்மா ஆணைக்­கு­ழுவின் ஆவ­ணங்­களில் இருந்து இந்தக் கடி­தத்தைக் கண்­டெ­டுத்து அவர் தனது புத்­த­கத்தில் இணைத்­துள்ளார்.

இந்த வீடியோ ஆதா­ரத்தை மறைத்­தது தொடர்­பாக எம்.கே. நாரா­யணன் மீது சிறப்புப் புல­னாய்வுக் குழு விசாரணையைத் தொடங்­கி­யது.

ஆனால், குழுவின் தலைவர் டி.ஆர்.கார்த்­தி­கேயன் இந்த விசா­ர­ணையை நடத்த அனு­ம­திக்­க­வில்லை என்றும் ரகோத்­தமன் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால்,‘எந்த வீடி­யோ­வையும் நான் மறைக்­க­வில்லை. புத்­தகம் பர­ப­ரப்­பாக விற்­ப­னை­யா­வ­தற்­காக இவ்­வாறு எழு­தி­யி­ருக்­கலாம்’ என்று எம்.கே. நாரா­யணன் அதனை மழுப்பி விட்டார்.

எம்.கே.நாரா­யணன், இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராகப் பணி­யாற்­றிய காலத்தில் தான், விடுதலைப் புலி­களை இலங்கை அர­சாங்கம் முற்­றாக அழித்­தது.

அதற்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­கி­யவர், எம்.கே.நாரா­யணன்.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் போது, எழும் பிரச்­சி­னை­களைக் கையாள இலங்­கை­யிலும், இந்­தி­யா­விலும் மூவர் அணிகள் அமைக்­கப்­பட்­டன.

இலங்­கையில் பசில் ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ, லலித் வீர­துங்க ஆகி­யோரைக் கொண்ட மூவ­ரணி அமைக்­கப்­பட்­டது.

அது­போல, இந்­தி­யாவில் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக இருந்த எம்.கே நாரா­யணன், வெளி­வி­வ­காரச் செய­ல­ராக இருந்த சிவ­சங்கர் மேனன், பாது­காப்புச் செய­ல­ராக இருந்த விஜய் சிங் ஆகி­யோரைக் கொண்ட மூவ­ரணி அமைக்­கப்­பட்­டது.

இந்த மூவ­ரணி, போரை திட்­ட­மிட்ட வகையில் முடிப்பதற்கு ஏற்படும் இடையூறுகளை களைவதில் முக்கிய பங்காற்றியது என்பதை, பசில் ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தனர்.

போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, 2009 ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் எம்.கே.நாராணயன் கொழும்பு வந்து பேச்சு நடத்தினார்.

போர்நிறுத்தத்தை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போரை நிறுத்துவதற்குப் பதிலாக, போரை முடித்து வைப்பது குறித்தே பேசி விட்டுச் சென்றார்.

அதற்குப் பின்னர் தான், முள்ளியவாய்க்காலில் பேரனர்த்தங்கள் அரங்கேறின.

எம்.கே.நாராணயனுக்கும் இலங்கை விவகாரங்களுக்கும் இடையிலான தொடர்பு இவ்வளவு தான் என்று கூற முடியாது.

ஒரு புலனாய்வு அதிகாரியாக அவர் இந்தியாவின் நலனை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டதாகவும் கூற முடியாது.

ஏனென்றால், அமெரிக்காவில் பிடிபட்ட மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஒருவரை தனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருந்தார்.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளையும் சுமந்தவர் எம்.கே.நாராயணன்.

இந்தச் சர்ச்சைகளால் கிடைத்த பிரபலத்தை விட, பிரபாகரன் என்ற இளைஞரால் அவர் தாக்கப்பட்டார் என்பது தான் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-சுபத்ரா

Share.
Leave A Reply

Exit mobile version