எவன்கார்ட் விவ­கா­ரத்தில் மோச­டிகள் இருப்­பதன் கார­ணத்­தி­னா­லேயே அமைச்சர் திலக் மாரப்­பன தனது பதவியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்க வேண்டும்.

குற்றம் இல்­லா­விடின் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை என தெரி­விக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி, எவன்கார்ட் மோச­டிகள் தொடர்பில் நீதி அமைச்­ச­ருக்கும் இதே குற்­றச்­சாட்­டுக்கள் உள்ளன. அவர் என்ன செய்­யப்­போ­கின்றார் எனவும் கேள்வி எழுப்­பி­யது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது எவன்கார்ட் விவகாரம் தொட ர்பில் வின­வி­ய­போதே கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவ­காரம் தொடர்பில் கடந்த காலத்தில் நடை­பெற்ற ஊழல்கள் தொடர்பில் உண்­மை­களை மூடி மறைக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது.

அதற்­கா­கவே கடந்த கால வரு­மான விப­ரங்கள் முதற்­கொண்டு சகல விடயங்களையும் வெளிப்­ப­டுத்தி வருகின்­றனர்.

எவன்கார்ட் விவ­கா­ரத்தில் இலங்­கைக்கு எத்­தனை கோடி ரூபாய் வரு­மானம் வந்­தது என்­ப­தல்ல இப்­போதிருக்கும் பிரச்­சினை.

இந்த ஆயுதக் கப்பல் எவ்­வாறு எமது பாது­காப்பு சட்ட விதி­மு­றை­களை மீறி செயற்­பட்­டது என்­பதே மிகப்­பெ­ரிய சிக்­க­லாகும். அதேபோல் சட்­ட­வி­ரோ­த­மாக ஆயுத ஊழலை மேற்­கொண்டு அதன்­மூலம் நாட்­டிற்கு பணத்தை கொண்­டு­வந்தால் அதை ஏற்­றுக்­கொள்ள முடி­யுமா?

கடந்த காலத்தில் விடு­தலைப் புலி­களின் பாவ­னையில் இருந்த ஆயு­தங்­களை இலங்கை அர­சாங்கம் பெற்றுக்கொண்­டது. அந்த ஆயு­தங்கள் தொடர்பில் அர­சாங்கம் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

அவ்­வா­றான நிலையில் அந்த ஆயு­தங்­களை சர்வ­தேச தீவி­ர­வா­தி­க­ளுக்கு விற்று பணம் பெற்­றி­ருக்க முடியுமல்­லவா. அவ்­வா­றான பல கேள்­விகள் எழு­கின்­றன.

ஆகவே இந்த விவ­கா­ரத்தில் பல­ரது தனிப்­பட்ட தலை­யீ­டு­களை அறிந்­து­கொள்ள முடி­கின்­றது. அவ்­வா­றான ஒரு தலை­யீடு கார­ண­மா­கவே அமைச்சர் திலக் மாரப்­பன தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­கொள்ள நேரிட்டி­ருக் கும்.

தமது தரப்பில் எவ்­வித குற்­றங்­களும் இல்­லை­யென்றால், இப்­போது முன்­வைத்­தி­ருக்கும் குற்­றச்­சாட்­டு­க்கள் தொடர்பில் உரிய கார­ணங்­களை முன்­வைக்க முடி­யு­மாயின் ஏன் அவர் பதவி வில­க­வேண்டும்.

கடந்த பாரா­ளு­மன்ற அமர்வின் போது இவர் தொடர்பில் எவ்­வாறு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டதோ அதேபோல் நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ மீதும் பல­மான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆகவே அவர் என்ன செய்­யப்­போ­கின்றார் என்ற கேள்­வியும் உள்­ளது. யார் பதவி வில­கு­கின்­றனர், யார் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்கின்றனர் என்ற காரணம் அவசியமற்றது.

எவன்கார்ட் விவகாரத்தில் உண்மைகளை கண்டறிந்து அதற்கேற்ற உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை அரசாங்கம் சரியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version