இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.
இந்த ஓவியம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டதில்லை
இத்தாலியர் ஒருவர் தீட்டிய ஓவியம் இந்த அளவுக்கு விலைபோயுள்ளது இதுவே முதல் முறை.
நியூயார்க்கிலுள்ள கிறிஸ்ட்டி ஏல நிறுவனத்தின் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் ஓவியத்தை வாங்க பெரும் போட்டி நிலவிய சூழலில் ஒன்பது நிமிடங்கள் ஏலத்துக்கு பிறகு 170 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.
இந்த ஓவியம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டதில்லை.
சிவப்பு நிற மெத்தை ஒன்றில், நீல நிற தலையணையை வைத்து நிர்வாணமாக இந்தப் பெண் சாய்ந்துள்ளது போலத் தீட்டப்பட்டுள்ள இந்த ஓவியம், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காட்சிக்கு வைக்கப்பட்டபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதே ஏலத்தில் அமெரிக்க ஓவியர் ராய் லிச்சென்ஸ்டைன் தீட்டிய ‘தாதி’ எனும் பெயருடைய ஓவியமும் அவரது படைப்புகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 95 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது.