அமெரிக்காவில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு ஆண்மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UNILAD-twerk10n-3-web27782
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் நடந்த இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கருப்பு நிற ஆடை அணிந்த பெண் ஒருவர், கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த அந்த நபரை உரசுகிறார், இதனால் அந்தநபர் அப்பெண்ணை விட்டு நகர்ந்துசெல்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிங்க் நிற ஆடை அணிந்திருந்த மற்றொரு பெண், அந்த நபரின் அருகில் நெருங்கி அவரை முத்தமிட முயற்சிக்கிறார், ஆனால் அந்நபரோ இவர்கள் இருவரின் முயற்சிக்கும் எவ்விதத்திலும் செவிசாய்க்காமல் விலகிசெல்கிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடி கமெராவில் பதிவாகியுள்ளது, தற்போது அப்பெண்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் பொலிசார், அவர்கள் இருவரும் கட்டாய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version