கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியுள்ளது.
இதனைக் கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பாற்றி உள்ளார்.
எனினும் சிறுமி காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் குளத்துக்கு மேலால் மேவிப் பாயும் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது.
வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு பெரிய அளவிலான முதலை ஒன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்தே இச் சிறுமியை தாக்கியுள்ளது.
கனகலிங்கம் விதுசா என்கிற இச்சிறுமி கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவி எனவும் தெரிய வருகிறது.
இது தொடர்பில் சிறுமியின் அப்பா கருத்து தெரிவிக்கையில், தான் காணும் போது மகளின் தலை முதலையின் வாயில் இருந்ததாகவும் தான் ஓடிச்சென்று சத்தமிட்டவாறு மகளின் தோளைப் பிடித்து இழுத்து காப்பாற்றியதாகவும் மகளின் தலை, உடம்பு, மற்றும் கால்களிலும் காயங்களை ஏற்படுத்தி விட்டதாக கூறினார்.
பிறந்து ஒருநாளே ஆன ஆண் சிசு மீட்பு
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கேணிநகர் கிராமத்தில் உள்ள வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டத்திலயே இக் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது இன்று காலை தோட்ட உரிமையாளர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்திற்குச் சென்ற போது தனது தோட்டத்தில் உள்ள குடிசைக்கு முன்னால் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு வாழச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸார் குழந்தையை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.