பாரிஸ் :பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 153 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரான்சில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று பிரான்ஸ் மற்றும் உலகச்சாம்பியன் ஜெர்மனி அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அதோடு மைதானத்திற்கு வெளியேவும் ஆயிரக்கணக்கானோர் பெரிய திரையில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தீவிரவாதிகள் சிலர் கூட்டத்தில் புகுந்துகண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த இடத்தில் வெடிகுண்டுகளும் வெடித்ததாக கூறப்படுகிறது.இதில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
அதுபோல் பாரிஸின் கிழக்குப் பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பலர் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
இப்படி பாரிஸில் 7 இடங்களில் நேற்றிரவு நடந்த வெடிகுண்டு வைப்பு மற்றும் துப்பாக்கி சூட்டில் 153 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
ஏராளமான பொதுமக்களையும் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவசர நிலை பிரகடனம்
பாரிஸில் இந்த சம்பவத்தை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் மனிதத்தன்மையற்றது.
இரக்கமே இல்லாமல் இந்த தாக்குதலை எதிர் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் ஹோலான்டே கூறியுள்ளார். 1500 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
பாரிஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் ஆறு இடங்களில் ஒன்று Stade de France கால்பந்து மைதானம். அங்கே ஜெர்மனிக்கும், பிரான்சுக்குமிடையே கால்பந்து போட்டியின் 81,000 பார்வையாளர்களுள் ஒருவர் ஃபிரான்ஸ் அதிபர் ஹோலேண்டே. குண்டு சத்தம் கேட்டதுமே அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுவிட்டார்களாம்.
பாரிஸ் நகரில் நேற்று நள்ளிரவு பல இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஐ.எஸ் இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பாரிஸில் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் எட்டு பேர் பலியாகியுள்ளனர். இதில் ஏழு தீவிரவாதிகள் வெடிகுண்டு பெல்ட் மூலம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மேலும் சிலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல்முறையாக பாரிஸில் ஊரடங்கு உத்தரவு.
அமெரிக்க அதிபர் ஒபாமா ‘இது மனிதத்தன்மைக்கு எதிரான தக்குதல். பிரான்ஸ் மக்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வோம் என்று கூறியுள்ளார்.
“This is an attack on all of humanity and the universal values that we share.” —@POTUS on the attacks in Paris https://t.co/yQThOvrdxZ
— The White House (@WhiteHouse) November 13, 2015
இந்திய பிரதமர் மோடி” பிரான்ஸில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலையளிக்கின்றன. பயங்கரமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
News from Paris is anguishing & dreadful. Prayers with families of the deceased. We are united with people of France in this tragic hour.
— Narendra Modi (@narendramodi) November 13, 2015
பங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பிரான்ஸ் மக்களின் துயரத்தில் நாம் கூட்டாக பங்கெடுத்துக் கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்த பிரான்ஸ் அதிபரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது..
சமூக வலைதளங்களில் பாரிஸ் தாக்குதல்:
பாரிஸ் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த கிராஃபிக் டிசைனர் ஷான் ஜூலியன் ‘Peace for Paris’ என்ற தலைப்பில், ஈஃபிள் டவருவடன் அமைதிக்கான சின்னத்தை வரைந்திருக்கிறார். சில நிமிடங்களிலேயே உலகெங்கும் வைரலாக பரவியது இந்த ஓவியம்.
Peace for Paris pic.twitter.com/ryf6XB2d80
— jean jullien (@jean_jullien) November 13, 2015
இந்த விடுதியில் எங்கு பார்த்தாலும் இரத்தம் பரவிக்காணப்படுவதாக அங்குள்ள ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர உதைபந்தாட்ட விளையாட்டு மைதானம் மற்றும் உணவு விடுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் குண்டுத்தாகுதல்களில் 43 பேர் பலியாகியுள்ளனர்.
பணயக் கைதிகளை மீட்கும் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட மக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி மீட்கப்பட்ட இந்த களியாட்ட விடுதியை சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது மைதானத்தில் பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்து என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி பிரன்கோசிஸ் கொலண்டே அதனை பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் ஆனால் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்துக்கு அருகில் மட்டும் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பீதியில் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் காரணமாக பிரான்ஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.