யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக இடைவிடாது தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக இவ் மழை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் அம் மக்கள் வீதிக்கும் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.இம் முகாங்களில் உள்ள சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள பாடசாலை மற்றும் ஆலயங்களிலும் தஞ்சம்புகுந்துள்ளனர்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கோணப்புலம், கண்ணகி, சபாபதிப்பிள்ளை ஆகிய முகாங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அங்குள்ள மக்கள் தமது உடமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாமலும், இருப்பதற்கும், படுத்துறங்குவதற்கும் இடம் இல்லாமல் பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர்.

வாழ்வதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இம் முகாம் மக்கள் அன்றாடம் செய்யும் கூலி வேலைகளை நம்பியே தமது அன்றான உணவுத் தேவையினை பூர்த்தி செய்து வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அன்றாட உணவினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரைனைப் பெற்றுக் கொள்ளவும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

வெள்ளக் காடாக முகாம் மாறியுள்ளதால் பெரும் சுகாதார சீர்கோடுகளும் அங்கு ஏற்பட்டுள்ளது.

1135ead7-11bb-48f4-8e6f-aecdc255e536

யாழ்.நகரத்திற்கும் வேறு சில பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக தடை

மழை வெள்ளம் காரணமாக யாழ்.நகரத்திற்கும் வேறு சில பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அராலி, வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, சுழிபுரம் போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதிகளுக்குச் செல்லும் பாதையினை மேவி வெள்ளம் பாய்ந்து வருவதாலேயே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version