பிரபல கால்பந்தாட்ட வீராங்கனையொருவர் ஆண் போன்று வேடமணிந்துகொண்டு ஆண்கள் அணியொன்றில் போட்டியில் பங்கு பற்றியபின் இறுதி நேரத்தில் தனது வேடத்தைக் கலைத்து வீரர்களையும் பார்வையாளர்களையும் வியப்பிலாழ்த்தியுள்ளார்.
ஸ்பெய்னைச் சேர்ந்த பிரெண்டா பெரெஸ் எனும் இந்த வீராங்கனை, ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் கால்பந்தாட்டத்தில் பிரகாசிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக இவ்வாறு மாறு வேடத்தில் விளையாடியுள்ளார்.
21 வயதான பிரெண்டா பெரெஸ், ஸ்பெய்னின் தொழில்சார் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவர்.
ஸ்பெய்னின் ஸ்பானியோல் மற்றும் வெலன்ஸியா கழகங்களின் மகளிர் அணிக ளின் சார்பில் விளையாடியவர் இவர். அண்மையில் ஆண் போன்று வேடமணிந்து கொண்டு ஆண்கள் அணிகளுக்கிடையிலான போட்டியில் இவர் பங்குபற்றினார்.
“எல் ஹோர்மிகுவேரோ” எனும் ஸ்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காக ஒரு சமூக பரிசோதனையாக ஆண் வேடத்தில் பிரெண்டா பெரெஸ் போட்டியில் பங்குபற்றினார்.
இடது: பிரெண்டா பெரெஸ், வலது: டெனி பெரெஸ் எனும் ஆணாக
லீக் நிலையில் இல்லாத ஆண்கள் கழகங்களுக்கிடையிலான இப்போட்டிக்காக பிரெண்டா பிரெஸுக்கு 7 மணித்தியாலங்களாக மேக் அப் செய்யப்பட்டது. ஆண் முகம் போன்று முகமூடியொன்றை அணிந்திருந்த அவர் தாடியுடன் காணப்பட்டார்.
லீக் நிலையில் இல்லாத ஆண்கள் கழகங்களுக்கிடையிலான இப்போட்டிக்காக பிரெண்டா பிரெஸுக்கு 7 மணித்தியாலங்களாக மேக் அப் செய்யப்பட்டது. ஆண் முகம் போன்று முகமூடியொன்றை அணிந்திருந்த அவர் தாடியுடன் காணப்பட்டார்.
இப்போட்டியில் பங்குபற்றிய மத்தியஸ்தர், பிரெண்டாவின் கழகத்தின் முகாமையாளர் ஆகியோருக்கு மாத்திரமே ஆண் வேடத்தில் பெண்ணொருவர் பங்குபற்றும் விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெனி பெரஸ் எனும் வீரராக அறிமுகப்படுத்தப்பட்ட பிரெண்டா, போட்டியில் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். அவர் பெண்ணாக இருக்கலாம் என வீரர்கள் எவரும் சந்தேகம் கொண்டதாக தெரியவில்லை. இறுதியில் பெனால்டி கிக் ஒன்றை அடிக்க அழைக்கப்பட்ட பிரெண்டா, பந்தை அடிப்பதற்குமுன், தலையில் அணிந்திருந்த விக், தாடி, முகமூடி என ஒவ்வொன்றாகக் கழற்றி தன்னை வெளிப்படுத்த, வீரர்கள் திகைத்துப் போயினர்.
தன்னை பெண்ணாக வெளிப்படுத்திய பின்னர் அந்த பெனால்டி கிக்கை உதைத்தார் பிரெண்டா பிரெஸ். அது வெற்றிகரமான கோலாக அமைந்தது.