Harin-Fernando-02

இலங்கை அரசியலில் தற்போது பேஸ்புக் சமூகவலையமைப்பு பலவிதமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த சில தின ங்களுக்கு முன்னர் அமைச்சர்கள் இருவர் தமது காழ்ப்புணர்ச்சியை பேஸ்புக் ஊடாக வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் , அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் படங்கள் சில தற்போது இணையத்தில் பரப்பப்பட்டுள்ளன.அப்படங்களில் ஹரின் , மதுபானப் போத்தல்கள் மற்றும் பெண்கள் சகிதம் இருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவு பக்கம் ஒன்றின் ஊடாகவே இப்படங்கள் இணைய உலகுக்குள் பிரவேசித்திருந்தன.

இப்படங்கள் ஹரின் பெர்ணான் டோ இரவு விடுதியொன்றில் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தின் போது எடுக்கப்பட்ட தெனவும் , இதற்காக பல இலட்சங்கள் செலவிடப்பட்டதாகவும் தகவல் பரப்பப்பட்டிருந்தது.

தற்போது இதற்கு பேஸ்புக்கின் ஊடாக பதிலளித்துள்ள ஹரின் , இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தெனவும் , நண்பரொருவரின் மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்ட த்தின் போது எடுக்கப்பட்ட தெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை பதிவிட்டவர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version