உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 32 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அன்று மாலை அவருக்கு ஒரு டாக்டரும், சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது அவர்கள் குழந்தையை பலமாக இழுத்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் தலையையும், சிதைந்த உடல் பாகங்களையும் அங்குள்ள குப்பைத் தொட்டியில் அவர்கள் வீசினர். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய உறவினர்களும் பிறந்த குழந்தை எங்கே என்று துருவித் துருவி கேட்டபோதுதான் பிரசவம் பார்த்த டாக்டரும், நர்சுகளும் குழந்தையின் தலையை தனியாக எடுத்ததும், பின்னர் அதனுடன் உடலின் மற்ற பாகங்களையும் குப்பைத் தொட்டியில் வீசியதும் அவர்களுக்கு தெரியவந்தது.

இதனால் கொந்தளித்துப்போன அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார் சிங் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இது குறித்து, மருத்துவமனையின் மகளிர் சிகிச்சை பிரிவு தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் பாண்ட் கூறும்போது, “இந்த சம்பவம் பற்றி விசாரணை நடக்கிறது. இதில் யாராவது தவறு செய்திருப்பது தெரியவந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்“ என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version