யாழ்ப்பாணம் சுதுமலையில் நீருக்குள் நீந்தி நீந்தி முருகனும் சூரனும் நடாத்திய கொடூரச் சமர்க் காட்சிகள் வழமையாக மழை குறைவாக இருக்கும் காலத்தில் இந்துக்களின் பிரதான விரதமான கந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளில் முருகனும் சூரனும் யுத்தம் செய்து சூரனை அழித்து விரதம் அனுஸ்ரிப்பது வழமை.
இம் முறை வெள்ளமாக இருந்தும் அதனையும் பாராது மக்கள் சூரன் போரில் பக்தியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
20-11-2015
வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது. இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதேவேளை மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள அருள் மிகு ஞான வைரவர் தேவஸ்தானத்தில் கந்த சஷ்டி விரதத்தின் சூரசம் ஹாரம் இன்று இடம் பெற்றது. வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம் பெற்றது.