பாரிஸ் நகர தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல்ஹமீட்அபாவுட் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபாவுட் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து தீவிரவாத தடுப்பு பொலிஸாரும், ராணுவ வீரர்களும் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின்போது, அபாவுட் கொல்லப்பட்டாரா, கைது செய்யப்பட்டாரா என்பது பற்றி உறுதியான தகவல் வெளியாகமல் இருந்த நிலையில் சற்று முன் அவர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 129 உயிர்களை பலிவாங்கிய தொடர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம்தீட்டியவர், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு பொலிஸாரால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அபாவுட் என்று அண்மையில் தெரியவந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version