வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், பிரான்ஸில் அதிகமான தாக்குதலை நடத்துவோம் என்றும் அவர்கள் அதில் சபதமிட்டு உள்ளனர்.
பாரீஸ் தாக்குதலில் 219 பேரை கொன்று குவித்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். இதைத் தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ஃபிரான்ஸ் விமானப்படை சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதற்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் படையும் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும், ஏற்கனவே தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள ஃபிரான்ஸில் அதிகமான தாக்குதல்களை நடத்துவோம் என்றும் அந்த வீடியோவில் அவர்கள் சபதமிட்டு உள்ளனர்.
மேலும் அந்த வீடியோவில், தற்கொலைப்படை மற்றும் கார் வெடி குண்டுகள் மூலம் பிரான்ஸின் நினைவுச் சின்னங்கள் மற்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை ஆகியவற்றை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை தாக்குதல் என்பது ஒரு தொடக்கமாகவே இருக்கும் என்றும் அதில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.