அது கடந்த நவம்பர் 10 ஆம் திகதி மாத்­தறை பிர­தேசம் மிக அமை­தி­யாக இருந்­தது. அந்த அமைதி நீடிக்­க­வில்லை. நேரம் இரவு 8.05 மாத்தறை பொலிஸ் நிலை­யத்­துக்கு அவ­சர அழைப்பு இலக்­க­மான 119 ஊடாக வந்த அழைப்பால் தொலை­பேசி அல­றி­யது.

“சேர்…. வெவ­ஹ­மன்­து­வவில் பிரச்­சினை சேர்….. துப்­பாக்கி சூடும் இடம்­பெற்­றுள்­ளது. அவ­ச­ர­மாக வாங்க… சேர்….” என பதற்­றத்­துடன் பேசிய அந்த குரல் தொலை பேசியை நிறுத்­தி­யது.

இரவு நேர விசேட ரோந்­துக்­காக இரு­வேறு பொலிஸ் குழுக்கள் தயா­ராகிக் கொண்­டி­ருந்த அந்த நேரத்தில் மாத்­தறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்­ப­தி­காரி தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் மஹிந்த கல்­தே­ராவும் வேலைப் பழு­வுக்கு மத்­தியில் இருந்தார்.

தக­வ­லை­ய­டுத்து மறு­க­ணமே செயற்­பட்ட தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் மஹிந்த கல்­தேரா தனது பொலிஸ் நிலை­யத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கொன்­சல்­கோ­ரா­ள­வையும், ரோந்து செல்ல தயா­ரான பொலிஸ் உத்தியோகத்­தர்­க­ளையும் அழைத்­துக்­கொண்டு வெவ­ஹ­மன்­துவ நோக்கி விரைந்தார்.

வெவ­ஹ­மன்­துவ கிரா­மத்­துக்குள் நுழையும் சந்­தியை பொலிஸார் அடையும் போது வேக­மாக ஒரு வேன் எதிர்த்­தி­சையில் மின்­னலாய் பறந்­தது. எனினும் தொடர்ந்தும் பொலிஸார் முன்­னோக்கி பய­ணிக்­கவே பொது­மக்கள் கூடி­யி­ருந்த அந்த வீட்டை பொலிஸார் அடைந்தனர்.

அவ­ச­ர­மாக வீட்­டினுள் நுழைந்த பொலி­ஸா­ருக்கு இலங்கை கடற்­படை வீரர் ஒருவர் இரத்த வெள்­ளத்தில் கிடப்­ப­தையும், அருகே ரீ-56 ரக துப்­பாக்கி ஒன்று காணப்­ப­டு­வ­தையும் மற்­றொரு அறையில் இரத்­தக்­கறை மட்டும் காணப்­ப­டு­வ­தையும் அவ்­வ­றையின் சுவர்­க­ளையும் துப்­பாக்கித் தோட்டாக்கள் துளைத்­தி­ருப்­ப­தையும் காண முடிந்­தது.

அந்த சட­லத்­துக்கு அருகே கதி­ரை­யொன்றில் வயோ­திப மாது ஒருவர் அழு­கை­யுடன் அமர்ந்­தி­ருந்தார்.

இந்த காட்­சிகள் மஹிந்த கல்­தேரா தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வுக்கு பாரிய விப­ரீதம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளதை காட்டி நின்­றது. பொலிஸார் நடந்­தது என்ன என்­பதை கண்­ட­றிய முயன்­றனர்.

முதலில் சட­ல­மாக கிடக்கும் கடற்­படை சிப்பாய் சமன் குமார என்­பவர் என்­பதை உறு­திப்­ப­டுத்­திய பொலிஸார், அந்த வீடு மாத்­தறை பிரதேச செய­ல­கத்தின் சிறுவர் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான சமிலா பிர­சா­தி­னி­யு­டை­யது என்­ப­தையும் உறு­தி­செய்­தனர்.

“சேர்…. சமன் குமார இங்கு வந்து சமி­லாவை சுட்­டு­விட்டு தானும் சுட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளான்… சமி­லாவை அவ­ச­ர­மாக இப்­போது மாத்­தறை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ளனர்” என ஸ்தலத்தில் இருந்த ஒருவர் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்கினார்.

அச்­ச­ம­யத்­தி­லேயே மாத்­தறை வைத்­தி­ய­சாலை ஊடா­கவும் தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் மஹிந்த கல்­தே­ரா­வுக்கு தகவல் கிடைத்­தது. அதில் சமிலா இறந்­து­விட்­ட­தாக கூறப்­பட்­டது.

தாம் ஸ்தலம் வரும் போது வேக­மாக எதிர்த்­தி­சையில் சென்ற வேன் சமி­லாவை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற வேனே என்­பது பொலி­ஸாரால் அப்­போதே உறு­திப்­ப­டுத்த முடிந்­தது.

இந்­நி­லையில் விபரம் உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. தென் பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப்பொ­லிஸ்மா அதிபர் சந்­தன விக்­கிரம ரத்ன, மாத்­தறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரஞ்சித் கொடித்­து­வக்கு ஆகி­யோரின் மேற்­பார்­வையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

ஸ்தலம் விரைந்த மாத்­தறை உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரவீந்திர அம்­பே­பிட்­டிய விசா­ர­ணை­க­ளுக்­கான ஆலோ­ச­னை­களை வழங்க மாத்­தறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மஹிந்த கல்­தேரா, குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கொன்சல்கோ­ராள, பொலிஸ் சார்­ஜன்­க­ளான அரு­ண­சாந்த, குல­ரத்ன, ரஞ்சித் ஆகியோர் உள்­ள­டங்­கிய குழு­வி­னரால் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

ஹேவா களு அத்­தகே சமிலா பிர­சா­தினி 26 வய­தான யுவதி, வல்­கம மஹ­ானாம கல்­லூ­ரியில் கல்­வி­ப­யின்ற சமிலா பேரா­தனை பல்­க­லையில் பட்­டப்­ப­டிப்பை முடித்­தவர். தொடர்ந்து மாத்­தறை பிர­தேச செய­ல­கத்தின் சிறுவர் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பாக செயற்­பட்­டவர்.

பேரா­தனை பல்­க­லையில் கல்வி கற்கும் காலப்­ப­கு­தியில், கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சென்று வரும் போது பஸ்ஸில் அவ­ருக்கு அறிமு­க­மா­ன­வரே சமன்­கு­மார என்ற 30 வய­தான கடற்­படை வீரர். தங்­காலை கடற்­படை முகாமில் சேவை­யாற்றி வந்த சமன் குமார சமிலாவின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உத­விய நிலையில் இரு­வ­ருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்­டது.

அந்த காதல் தீ பற்றிக் கொண்ட வேகத்­தி­லேயே அணை­யவும் செய்­தது. அதா­வது சமிலா பல்­கலை படிப்பை முடித்­த­வுடன், வேலையும் கிடைத்­தது. அப்­போது சமன்­கு­மா­ர­வுடன் சிற்­சில கருத்து வேறு­பாடுகள் ஏற்­ப­டவே தம்­மி­ரு­வ­ருக்கும் ஒத்­து­வ­ராது எனக்­கூறி சமிலா, சமன் குமா­ரவை ஒதுக்கி காதல் தொடர்பை முறித்துக் கொண்டார்.

எனினும் சமன் குமா­ர­வுக்கு சமி­லாவை மறந்து ஒதுங்க முடி­ய­வில்லை. அன்று தீபா­வளி தினத்­தன்று அரச விடு­முறை நாள். தங்­காலை கடற்­படை முகாமில் சமன் குமா­ர­வுக்கு மாலை 4.00 மணி முதல் 8.00 மணி­வரை கடமை நேர­மாக அன்று வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்­தது.

சமி­லா­வுக்கு அன்று விடு­முறை அல்­லவா. அவள் வீட்­டி­லேயே இருந்தாள். கூடவே அம்மா, தங்கை ஆகி­யோரும் இருந்­தனர். அவள் அண்ணன் மட்டும் அச்­ச­மயம் வீட்டில் இருக்­க­வில்லை.

அப்­போது நேரம் எப்­ப­டியும் இரவு 7.00 மணியை தாண்டி இருக்கும். சமி­லாவின் வீட்டு பிர­தான வாயில் திடீ­ரென சத்­தத்­துடன் திறக்­கப்­பட்­டது. வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்த வீட்டார் முன்னால் ஓடி வந்­தனர்.

ஆம் மறு­கணம் அவர்கள் கடற்­படை சீரு­டையில் கையில் ரீ-56 ரக­துப்­பாக்­கி­யுடன் சமன் குமார வீட்­டினுள் பிர­வே­சிப்­பதை கண்­டனர். சமி­லாவின் அம்­மாவும் தங்­கையும் பயத்தில் உறைந்து போயினர். வீட்டில் நுழைந்த சமன்­கு­மார நேராக சமி­லாவின் அறையை நோக்கி சென்றான்.

மறு­கணம் டுமீல் டுமீல் என்ற சத்தம் மட்டும் அம்மா, தங்­கையின் கூக்­கு­ர­லையும் தாண்டி கேட்­டது. தொடர்ந்து நிலத்தில் சாய்ந்த சமிலா அருகே சென்ற சமன்­கு­மார தோட்டா நிரப்­பப்­பட்ட ரீ-56 துப்­பாக்­கியை தனது தொண்டைக் குழியில் வைத்து இயக்­கவே அவள் அருகிலேயே சட­ல­மானான்.

வீட்­டுக்கு வெளியே சென்­றி­ருந்த சமி­லாவின் அண்­ண­ணுக்கும் தனது வீட்டில் துப்­பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்கவே வீட்டை நோக்கி ஓடி வந்­துள்ளான். வந்­தவர் தனது தங்கை இரத்த வெள்­ளத்தில் கிடக்க அவள் மேல் சமன் குமார கிடப்­பதை கண்­டுள்ளான்.

உடனே தனது தங்­கையின் உயிரை காக்க முயற்­சித்­துள்ள அண்ணன், சமன் குமா­ரவை இழுத்து பிர­தான அறையில் போட்­டு­விட்டு தங்­கையை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றுள்ள போதும் அவளை காப்­பாற்ற முடி­ய­வில்லை.

இந்த விப­ரங்­களை உறுதி செய்து கொண்ட பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை தொடர்ந்­தனர்.

இதன்­போது தனது காத­லி­யான சமிலா மீது சமன் குமார 14 துப்­பாக்கிச் சூட்­டுக்­களை நடத்­தி­யுள்­ளதை கண்­ட­றிந்த பொலிஸார் அவன் கடமை நேரத்­தி­லேயே இவ்­வாறு வெளியே வந்து இந்த கொலை மற்றும் தற்­கொ­லையை புரிந்­துள்­ளதை கண்­ட­றிந்­தனர்.

கடமை நேரத்தில் சமன்­கு­மார ஆயு­தத்­துடன் எப்­படி வெளியே வந்தார் என்­பது பொலி­ஸா­ருக்கும் பாரிய சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், ரீ-56 ரக துப்­பாக்­கி­யுடன் 43 தோட்­டாக்கள் உயிர்ப்­புள்ள நிலையில் இருந்­துள்­ள­தையும் பொலிஸ் விசா­ர­ணையில் கண்­ட­றிந்­தனர்.

சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு வாக்­கு­மூலம் அளித்­துள்ள சமி­லாவின் தாய் லீலா­வதி தனது மகள் இரு வரு­டங்கள் சமன் குமாரவுடன் காதல் தொடர்பை பேணி­ய­தா­கவும் பின்னர் அதனை கைவிட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றா­யினும் பொலிஸ் தக­வல்­களின் படி கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் சமி­லாவின் வீடு புகுந்து அவளை அச்­சு­றுத்­தி­ய­தாக சமன் குமா­ர­வுக்கு எதி­ராக மாத்­தறை பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அதன்­படி விசா­ரணை செய்­துள்ள பொலிஸார் கடந்த பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி அவன் சர­ண­டைந்­ததை தொடர்ந்து கைது செய்­தனர். அதன் பின்னர் மாத்­தறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­செய்­யப்­பட்ட அவன் 5000 ரூபா ரொக்கப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தான்.

இத­னி­டையே சமி­லா­வுடன் சமன் குமார 8 வரு­டங்­க­ளாக காதல் தொடர்பு கொண்­டி­ருந்­த­தாக கடற்­படை சிப்பாய் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு முறை சமன் குமார சமி­லாவை பார்க்க அவள் வீட்­டுக்கு சென்ற போது அங்கு வைத்து பொல்லால் தலையில் தாக்­கப்­பட்­ட­தா­கவும் அதற்­காக மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில் அவர் சிகிச்சை பெற்­ற­தா­கவும் அந்த கடற்­படை சிப்பாய் தெரி­வித்தார்.

எனினும் சமிலா சமன் குமா­ரவை 2 வரு­டங்­க­ளா­கவே காத­லித்­த­தாக அவள் பல்­கலை தோழிகள் தெரி­விக்­கின்­றனர்.

சமி­லாவும் சமன் குமா­ரவும் காத­லித்­தார்கள் என்­ப­தற்­கான ஆதா­ர­மாக இரு­வரும் சேர்ந்­தெ­டுத்த புகைப்­ப­ட­மொன்றை விசா­ரணை செய்யும் பொலிஸார் சமன் குமா­ர­வி­ட­மி­ருந்து மீட்­டனர்.

அதில் எனது மர­ணத்தை சமி­லா­வுக்கு பொறுப்புக் கொடுங்கள் என நண்பி ஒரு­வரின் பெயரை குறிப்­பிட்டு எழு­தப்­பட்­டி­ருந்­த­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்டிக் காட்­டினார்.

அத்­துடன் இறுதிச் சடங்கை செய்ய பணத்தை ATM அட்டை மூலம் வங்­கியில் எடுக்­கு­மாறும் அதில் எழு­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அந்த அட்­டையின் இர­க­சிய இலக்­கமும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அப் பொலிஸ் அதி­காரி குறிப்­பிட்டார்.

நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணை­களை மாத்­தறை மேல­திக நீதிவான் மஞ்­சுள கரு­ணா­ரத்ன முன்­னெ­டுத்­தி­ருந்தார். உண்­மையில் யுத்­தத்தின் பின்னர் படை­யினர் இவ்­வா­றான குற்றச் செயல்­க­ளோடு தொடர்­பு­படும் பல சம்­ப­வங்கள் பதி­வா­கி­விட்­டன. இந்­நி­லையில் இந்­நி­லைமை பாரிய பிரச்­சி­னை­யாகும்.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் படை சிப்­பாய்­களின் மன­நி­லை­யா­னது சிவில் பிர­ஜை­களின் மன­நி­லையில் இருந்து பாரிய வேறு­பா­டு­க­ளுடன் காணப்­ப­டு­வ­தாக மனோ­தத்­துவ நிபு­ணர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர்.

குறிப்­பாக அமெ­ரிக்க–வியட்நாம் யுத்­தத்தின் பின்னர் அமெ­ரிக்க படை­யினர் மத்­தியில் ஏற்­பட்ட அசா­தா­ர­ண­மான அசை­வு­களை வைத்து 1970 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளி­லேயே இவ்­வி­ட­யத்தை உள­வி­ய­லா­ளர்கள் உறுதி செய்­தனர்.

யுத்த அனு­ப­வங்கள் அதிக பயிற்சி உள்­ளிட்­டவை சாதா­ரண மனி­த­னி­லி­ருந்தும் அவர்­களை ஆவே­ச­மா­ன­வர்­க­ளாக மாற்­று­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதனால் அவ்­வா­றான மன­நிலை கொண்ட படை­யி­னரின் விருப்­பத்­துக்­கு­ரி­ய­வர்கள், பழகும் சிவி­லி­யன்கள் அதிக பாதிப்­புக்­களை எதிர்­கொள்வர்.

இவ்­வாறு ஆவேச மன­நி­லையை PTSP நிலைமை என உள­வி­ய­லா­ளர்கள் வரை­ய­றுக்கும் நிலையில் அவர்களுக்கு உளவியல் சிகிச்சைகளையும் கட்டாயமாக பரிந்துரை செய்கின்றனர்.

இந்நிலையில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் அதிகரித்துள்ள படையினரின் இத்தகைய ஆவேச குற்றங்களை கட்டுப்படுத்த, அவர்களுக்கு உளவியல் பயிற்சிகளின் கட்டாயத்தை பறைசாற்றி நிற்கின்றன.

சமிலா கொலை, சமன் குமாரவின் தற்கொலை விவகாரம் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சமன் குமாரவை பொறுத்தவரை 7 சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தின் கடைக்குட்டி. ஆறு மகன்மாரை நாட்டை காக்கும் பணிக்காக முப்படைகளுக்கும் ஒப்படைத்த அவன் தாய் ஒரே மகளை கூட இராணுவ வீரர் ஒருவருக்கே திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இத்தகைய இராணுவ சம்பந்தம் உள்ள குடும்பத்தின் கடைக்குட்டியே தனது இனிய காதலுக்கு இப்படியொரு கொடூரமான முடிவை திட்டமிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

6 மகன்மாரை நாட்டைக் காக்கும் படையினருக்கே தாரைவார்த்த அந்த வீரத்தாய் இன்று மஹரகம புற்றுநோய் வைத் தியசாலையில் சிகிச்சைப் பெறும் நிலையில் தனது கடைக்குட்டி செய்த கொடூரம் அவருக்கு இன்னும் தெரியாது.

Share.
Leave A Reply

Exit mobile version