ஜம்மு: பெண் போலீஸ் அதிகாரியின் மடியில், ஆண் தலைமைக்காவலர் அமர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில், மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், அங்குள்ள தலமைக்காவலர் ஒருவர் வேண்டும் என்றே மடியில் உட்கார்ந்து இருக்கும் படங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இந்தப் புகைப்படங்கள், ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் போலீஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்று தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

புகைப்படத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் உட்காரும் தலைமைக் காவலர் ஜாகீர் உசேன் என்பது அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

மேற்கண்ட சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றதாக ராஜவுரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஜம்மு போலீசார் மத்தியில் பரபரப்பாகியுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version