காரை 100 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற புகையிரதம்: ஒருவர் பலி; இருவருக்கு படுகாயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ். நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் படுகா யங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் மற்றும்மொருவர் காயங்களுடனும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த அதிவே புகையிரதம் ஒன்று கச்சேரியிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற காரை மோதி 100 மீற்றர் தூரம் வரை காரை இழுத்துச் சென்று தூக்கி வீசியது.
காரில் இருந்தவர்கள் பொது மக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் குறித்த கார் படுசேதங்குள்ளாகியது. இதேவேளை விபத்து இடம்பெற்ற பகுதியில் புகையிரத சமிக்ஞை இருந்தபோதிலும் பாதுகாப்பு கடவை இல்லாமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் பொறியியலாளரான எஸ்.சுதாகரன் (வயது41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் ஆதவன் (வயது28), அரவிந்தன் (வயது28), கம்பதாஸன் (வயது23) என்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.