அலவத்துகொடை, கொனகல்கலை பிரதேசத்தில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு 50 வயது நபர் ஒருவரை திருமணம் முடிப்பதாக கை எழுத்திட்ட பின்னர் மறுதினம் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த 26 வயதான யுவதி ஒருவரை வேன் ஒன்றில் வந்த ஐவர் கொண்ட குழு ஒன்று கடத்திச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது இது தெரிய வந்துள்ளது.
குறித்த யுவதி முச்சகக்ர வண்டியில் பயணித்துள்ளார். அதன்போது வேன் ஒன்று அம்முச்சக்கர வண்டியை இடை மறித்து யுவதியை பலவந்தமாக வேனில் ஏற்றிச் வென்றுள்ளனர்.
பின்னர் மருநாள் ஜீப் வண்டி ஒன்றில் அவரை கடத்தப்பட்ட இடத்தில் இறக்கிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்த பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான ஒருவரே இக் கடத்தளில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் இவ் யுவதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்குடன் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துளள்து.
இவ்வாறு கடத்திய யுவதியை தம்புள்ளை கண்டலம பிரதேசத்தில் தடுத்து வைத்திருந்துள்ளதாகவும் அவரை மிரட்டி பலவந்தமாக அவரிடமிருந்து திருமண ஒப்புதலை பெற்ற பின் அவரை மீண்டும் கொண்டு வந்து விட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட யுவதியை மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.