ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் ஈராக்கின் குர்து படையினர் சமீபத்தில் சிஞ்சர் எனும் கிராமத்தை மீட்டெடுத்துள்ளனர்.
முற்றிலும் சிதைந்து காணப்பட்ட அந்த கிராமத்தினை தீவிரமாக ஆராய்ந்த குர்து படையினருக்கு அதிர்ச்சி தரும் வகையில், ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கட்டமைக்கப்பட்ட 40 பதுங்கு குழிகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சிதையுண்டு காணப்படும் வீடுகளுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பதுங்கு குழிகளில் மின்சார வசதியுடன், உணவு மற்றும் குவியலாக வெடி பொருட்களையும் குர்துப்படையினர் மீட்டுள்ளனர்.
ஒரு சில பதுங்கு குழிகளில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் அமெரிக்க தயாரிப்பு மூலப்பொருட்களையும் குர்துப்படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க கூட்டுப்படைகளின் வான்வழி தாக்குதல் தொடங்கப்படுவதன் வெகு நாள் முன்னரே ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இந்த பதுங்கு குழிகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிஞ்சர் நகரத்தில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை சிறைபிடித்தும் படுகொலை செய்தும் நகரினை ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து நகரினை மீட்கும் பொருட்டு கடந்த ஓராண்டுகளாக போராடி வந்த குர்துப்படையினர் இறுதியில் சிஞ்சர் நகரினை மீட்டுள்ளனர்.
சிஞ்சர் பகுதியில் இருந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை துரத்திய பின்னர் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் நகரின் மத்திய பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பிணக்குவியலையும் கண்டுபிடித்துள்ளனர்.
A secret network of tunnels built by ISIS have been discovered under an Iraqi town by Kurdish forces. A Kurdish soldier shows bomb-making materials found in the tunnels
Around 40 underground routes were found in Sinjar, complete with sleeping quarters, pictured, electricity, sandbags, American-made bomb making tools, medicine and copies of the Koran
A secret network of tunnels built by ISIS have been discovered under an Iraqi town by Kurdish forces. A Kurdish soldier shows bomb-making materials found in the tunnels
The houses where ISIS fighters enter the tunnels, pictured, are derelict buildings now after the more than a year of fighting for the town