மகனின் பிறந்த நாளுக்கு கேக் ஒன்றை வாங்கும்பொருட்டு களப்பொன்றில் இறால் பிடிக்கச் சென்ற தந்தையொருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்த சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொக்கல களப்பில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அஹங்கம குருகந்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நளின் பிரசாத் குமார தழுவத்த என்ற 32 வயதான நபரே முதலையினால் கொல்லப்பட்டுள்ளார்.

தனது இளைய மகனின் பிறந்தாளுக்காக கேக் வாங்கும் பொருட்டு அதற்கு தேவையான பணத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே இறால் பிடிக்க கொக்கல களப்புக்குச் சென்றுள்ளார்.

பின்னர் இவர் வீடு திரும்பாமையால் , பிரதேசவாசிகள் தேடுதல் நடத்திய போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பணத்தை வீண்விரயம் செய்யும் இதே நாட்டில் , மகனின் சிறிய சந்தோசத்திற்காக தனது உயிரையே விட்ட இத்தகைய தந்தைகளும் இருக்கவே செய்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version