சுண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அதில், சுமார் 50 வரையான துண்டுப் பிரசுரங்கள் இருந்துள்ளன என்று அறியமுடிகின்றது. இந்த துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்துவருவதாகவும் பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொது நிகழ்வுகளை நடாத்தும் எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நாளை, வீர மரணம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகோருமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களானால் கூட, போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் உரிமை எவருக்கும் உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட தமிழர்களை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தாது, அமைதியான முறையில் நினைவுகூறுமாறு, தான் பொதுமக்களை கேட்டுக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.