நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட விரக்தியளிக்க கூடிய தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் அப்தெல்ஹமீட் அபாவுட் (Abdelhamid Abbaoud) இறுதியான இனம் காணப்பட்டான், சிதைவடைந்திருந்த அவனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைவிரல் அடையாளங்களை அடிப்படையாக வைத்தே அவன் இனம்காணப்பட்டான்,அவனது குண்டுகள் துளைத்த உடல் செயின்டெனிஸில் மீட்கப்பட்டது.
27 வயது அபாவுத் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை விட அவனை முன்னரே (பாரிஸ் தாக்குதல்களிற்கு முன்னர்) கண்டுபிடிப்பதற்கு தவறியுள்ளமை குறித்த கோபமே மேலோங்கியுள்ளதை காணமுடிகின்றது. பாரிஸ் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அபாவுத் என நம்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அபாவுத்தினால் மிகவும் சுலபமாக சிரியாவிற்கும்,ஐரோப்பாவிற்கும் இடையில் நடமாட முடிந்துள்ளமை ஐரோப்பாவின் மோசமான அச்சத்தினையும், மிகப்பெரும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
அதிகரித்துவரும் பயங்கரவா அச்சுறுத்தலை கையாள்வதற்கு எல்லைக்கட்டுப்பாடுகள் போதுமானவையல்ல என்பதையும் அது புலப்படுத்தியுள்ளது.
அபாவுத்தின் மரணத்தை தொடர்ந்து எங்கு தவறு நடந்தது என்ற பிரேதபரிசோதனையில் ஐரோப்பாவின் பாதுகாப்பு அமைப்புகள் இறங்கியுள்ளன.
Abdelhamid Abbaoud
அபாவுத் தனது மெராக்கோ மத்தியதர குடும்பத்திடமிருந்து பிரிந்த பின்னர் 2012 பிற்பகுதியில் அல்லது 2013 ஆரம்பத்தில் பிரசல்ஸில் இருந்து காணமற்போனதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவனை அவனது குடும்பத்தினர் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் தனது 12 வயதில் அவன் பாடசாலையிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. அதன் பின்னர்அவனது காலம் மொலன்பீக்கின் வீதிகளில் கழிந்துள்ளது. அங்கு அவன் அதிகளவில் வன்முறைக்கு பழக்கப்பட்டுள்ளான்.
இங்கேயே அவன் பாரிஸ்தாக்குதலை மேற்கொண்ட இன்னொரு நபரான சலாஅப்தெல்சலாமை சந்தித்துள்ளான், ( இன்னமும் தேடப்படும் நபர்) இருவரும் வன்முறை மிகுந்த கொள்ளைசம்பவத்திற்காக 2011 இல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலேயே தீவிரவாதமயப்படுத்தப்பட்டனரா என்பது தெரியவில்லை.
அபாவுத் சிரியாவிற்கு செல்லமுயன்ற வேளை ஜேர்மனி ஊடகாவே சென்றதாக தெரியவருகின்றது. அபாவுத் இஸ்தான்புலிற்கு செல்வதற்கு முன்னர் 20 ஜனவரி 2014 இல் பொன் விமானநிலையத்தில் வைத்து விசாரணை செய்ததை ஜேர்மன் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவரது சிறிய குற்றச்செயல்களும், அவர் இஸ்லாமியமயப்படுத்தப்பட்டமையும் பெல்ஜியம் அதிகாரிகள் அவரை தமது கண்காணிப்பு பட்டியலில் வைத்திருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
எனினும் அவரை கண்காணிக்க மாத்திரமே உத்தரவை வழங்கினோம்,கைதுசெய்ய உத்தரவு வழங்கவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
அவர் சிரியாவிற்கு செல்வதை தடுத்திருப்போம் அல்லது கைதுசெய்திருப்போம் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.
சிரியாவிற்கு அவர் சென்றுசேர்வதற்கு ஐரோப்பிய தொண்டர்கள் துருக்கிய நகரான காஜியன்ஸ்டெப் ஊடாகா ஐஎஸ்எஸ் கட்டுப்பாட்டிலுள்ள சிரியா நகரமான ஜராபுலஸிற்கு வந்துசேர்வதை உறுதிப்படுத்தும் விடயங்களிற்கு பொறுப்பாகவுள்ள ஐஎஸ் இன் மூத்த தலைவர்களில் ஓருவரான அபு முகமட் அல் சிமாலி உதவியிருக்கலாம், கடந்த வாரம் சிமாலி குறித்து தகவல்களை வழங்குபவர்களிற்கு 5 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்து.
சிரியாவிற்கு வந்;துசேர்ந்ததும் அபுட் மிகவேகமாக ஐஎஸ் அமைப்பினர் மத்தியில் பிரபலமடைய தொடங்கினான்,ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் மீண்டும் தமது நாடுகளிற்கு திரும்பி அங்கு தாக்குதல்களை மேற்கொள்வவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவின் தலைவனான்.
அபாவுத் தன்னை பெல்ஜியத்தின் உமர் என அழைக்கத்தொடங்கினான். மார்ச் 2014 இல் பெருமளவு உடல்களிற்கு மத்தியில் தான் நின்றுகொண்டிருக்கும் படத்தை எடுத்ததன் மூலம் தன்னை ஈவிரக்கமற்றவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டான். பிரசல்சில் உள்ள யூத அருங்காட்சி சாலை மீது தாக்குதலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு காரணமான பிரான்ஸை சேர்ந்த ஜிகாத் தீவிரவாதி அபாவுத்தின் பிரிவினை சேர்ந்தவன்.
அபாவுத் மீண்டும் 2014 இல் மேலும் இரு சகாக்களுடன் ஐரோப்பாவிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுடன் இணைந்து அவன் பெல்ஜியத்தில் தாக்குதல்களை திட்டமிட்டுள்ளான்.
அவர்கள் எப்படி மீண்டும் ஐரோப்பாவிற்கு வந்தனர் என்பது மர்மமாக காணப்படுகின்றது. எனினும் தங்களுடைய பயணம் இலகுவானதாக இருக்கவில்லை என அவன் ஐ.எஸ்.ஐ. எஸ் அமைப்பின் சஞ்சிகை தபீக்கிற்கு தெரிவித்தான்.
நாங்கள் ஐரோப்பாவிற்கான பயணத்தின் போது பல இடர்களை சந்தித்தோம். அங்கு நுழைவதற்கான வழிகளை பல மாதங்களாக தேடி அலைந்தோம், அல்லாவின் அருளால் நாங்கள் வெற்றிகரமாக பெல்ஜியத்திற்குள் நுழைந்தோம், எங்களால் ஆயுதங்களை பெற முடிந்தது, நாங்கள் மறைவிடங்களை உருவாக்கினோம், நாங்கள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டோம் என அபாவுத் தெரிவித்திருந்தான்.
அபாவுத்தினால் எப்படி ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றது என்பதுகுறித்து பல விதமான ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஒன்று அவன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நுழைந்திருக்கலாம்.
பாரிசின் உதைபந்தாட்ட மைதானத்திற்கு அருகில் தங்களை வெடிக்கவைத்த பல தற்கொலை குண்டுதாரிகள் போலி ஆவணங்களுடனேயே உள்ளே நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மோதலில் கொல்லப்பட்ட சிரிய படைவீரன் ஓருவனின் பெயரை கூட அவர்கள் இந்த ஆவணங்களிற்கு பயன்படுத்தியுள்ளனர்.
அபாவுத்தும் அவனது இரு சகாக்களும் பொலிஸாராக நடித்து பெல்ஜியத்தில் உள்ள பொலிஸ் நிலையமொன்றை தாக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ,எனினும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது, மறைவிடமொன்றில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் அவனது இரு சகாக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை ஓருங்கிணைத்தவேளை அபாவுத் கிரேக்கத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஏதேன்சில் உள்ள மறைவிடமொன்றிலிருந்து தனது தொலைபேசி மூலம் அவன் அதனை வழிநடத்தியுள்ளான்.
பெல்ஜியம் மறைவிடத்தில மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பின்னர் கிடைத்த தகவல்களை வைத்து கிரேக்கத்தில் அவனது சகாஓருவன் கைதுசெய்யப்பட்டான்.
ஆனால் அபாவுத்தப்பியிருந்தான், உலகின் முக்கிய புலானாய்வு அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிட்டு தான் சிரியாவிற்கு மீண்டும் திரும்ப முடிந்தமை குறித்து அவன் தம்பட்டமடித்திருந்தான்.
சிரியாவிற்கு சென்றதும் அவன் அங்கிருந்து பிரான்சில் இருந்த அல்ஜீரிய மாணவனான சிட் அகமட் கலாமிற்கு பாரிசின் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்குவதற்கான உத்தரவை வழங்கியுள்ளான்.
ஐரோப்பாவை சேர்ந்த ஜிகாத்திகளை திரட்டும் நடவடிக்கைக்காக இந்த வருடம் பெல்ஜியம் நீதிமன்றம் அவன் இல்லாத நிலையிலும் 20 வருட சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.
குறிப்பாக தனது 13 வயது சகோதரனனை ஐஎஸ் அமைப்பில் சேர்த்ததிற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, 13 வயது யூனுஸ் ஐஎஸ் அமைப்பில் உள்ள வயது குறைந்த உறுப்பினர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்டில் அம்ஸ்சடாமிலிருந்து பாரிஸட்நோக்கி சென்றுகொண்டிருந்த அதிவேக புகையிரதத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளமுயன்ற மொராக்கோவை சேர்ந்த தீவிரவாதிக்கான உத்தரவை வழங்கியதும் அபாவுத்தே.
அபாவுத்தின் பெயர் மீண்டும் ஆகஸ்டில் பாரிசில் அடிபட்டது. ரக்காவில் உள்ள ஐஎஸ் பயிற்சி முகாமில் அவன் ஆறு நாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை கைதுசெய்யப்பட்ட பிரான்ஸ் தீவிரவாதியொருவனே தெரிவித்துள்ளான். பாரிய உயிர் சேதத்தை ஏற்படுத்துவதற்காக இசைநிகழ்வொன்றில் தாக்குதலை மேற்கொள்ளுமாறு அபாவுத் தனக்கு உத்தரவிட்டதாக அவன் குறிப்பிட்டிருந்தான்.
தான் 25 கிலோ வெடிமருந்தை தயார் செய்துவிட்டதாகவும் ஆனால் தன்னால் தனது சொந்த நாட்டிற்கு திரும்பமுடியாமலுள்ளதாகவும், தெரிவித்ததகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
பாரிசில் மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்காணித்து ஒருங்கிணைப்பதற்காகவே அபாவுத் பிரான்சிற்கு அனுப்பட்டதாக தெளிவாகின்றது. மீண்டும் அவன் எவரும் கண்ணிலும் படாமலேயே அங்கு வந்துள்ளான். ஐரோப்பிய புலனாய்வு அமைப்பு ஒன்று மாத்திரம் சிறிய தகவலை வழங்கியுள்ளது.
அவரை அதிகாரிகள் மீண்டும் கண்டுபிடித்தவேளை அனைத்தும் முடிவடைந்திருந்தது. அவர் இறுதியில் செயின் டெனிசில் இடிபாடுகளிற்கு இடையில் உயிரற்ற நிலையில்கண்டுபிடிக்கப்பட்டார். அபாவுத் பல கேள்விகளையும், அவனை வேறு எவராவது பின்பற்றினால் என்ன நடக்கும் என்ற அச்சத்தையும் விட்டுச்சென்றுள்ளான்.