நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவனான செந்துாரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகள் துாண்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த மாணவன் கொக்குவில் இந்துகல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறையில் ஊடக கற்கை , தமிழ் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களை தேர்வு செய்து கற்று வந்துள்ளான். எதிர்வரும் (2016 ம் ஆண்டு )ஆகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளான்.
பாடசாலையில் மிக அமைதியாக தானும் தன் பாடும் என்று இருப்பான், நன்றாக படிப்பான், விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு உள்ளவன். பெரிதாக நண்பர்கள் என்று சுற்றி திரிய மாட்டான். பாடசாலை வாறதும் போறதும் தான் தெரியும் அவ்வளவு அமைதியானவன்.என மாணவனுடன் கல்வி கற்ற சக மாணவர்கள் தெரிவித்தனர்.
கோப்பாய் வடக்கில் வாழைத்தோட்டங்களுக்கு நடுவில் உள்ள சிறிய வீட்டில் 1997ம் ஆண்டு செப்டெம்பர் 18 ம் திகதி இரண்டு பெண் சகோதரிகளுக்கு பின்னர் பெற்றோருக்கு மூன்றாவது ஆண் மகனாக பிறந்தவனே செந்தூரன் எனும் இம் மாணவன் ஆவான்.
இந்த மாணவனுக்கு இரு அக்காக்களும் ஒரு தங்கையும் தம்பி ஒருவரும் உள்ளனர் மாணவனின் தந்தையார் தோட்டவேலையில் ஈடுபடுபவர் .
வீட்டிலேயே அமைதியானவன், தம்பியார் சில வேளைகளில் தகப்பனுக்கு உதவியாக தோட்டத்திற்கு தண்ணீர் கட்ட போவான், இவன் பெரியளவில் போக மாட்டான், பெரும்பாலும் வீட்டு சாமி அறையினுள் இருந்து படித்துக்கொண்டு இருப்பான். வீட்டில் சகோதர்களுடன் மிக பாசமாக பழகுவான்.
ஊரிலும் நண்பர்கள் என்று பெரியளவில் சுற்றி திரிய மாட்டான். அருகில் உள்ள வாசியசாலைக்கு சென்று தினசரி பத்திரிகைகள் அனைத்தையும் வாசிப்பான். புத்தகங்கள் வாசிப்பான்.
அரசியல் சம்பந்தமாக நண்பர்களுடன் விவாதிப்பது கதைப்பது இல்லை. நண்பர்களுடன் சகஜமாகவே பழகுவான். தனக்கு என சொந்தமா முகநூல் கணக்கு வைத்திருக்கின்றான்.
அதில் கூட அரசியல் சம்பந்தமாகவோ போராட்டங்கள் தொடர்பிலான பதிவுகளே இட்டது கிடையாது அது தொடர்பான செய்திகளை பகிர்ந்ததும் இல்லை.
நேற்றைய தினம்(புதன் கிழமை) திருக்கார்த்திகை யை முன்னிட்டு அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. அதன் போது கோயிலில் நின்றான். மாலை வீட்டில் வீட்டு தீபம் ஏற்றி சாதரணாமாகவே இருந்தான்.
நாட்டில் பிரச்சனை நடைபெற்ற போது சிறு வயது பையனாகவே இருந்தான்.யாழ் இடப்பெயர்வின் போது இவன் பிறக்கவே இல்லை. யுத்தம் முடிவுக்கு வந்த போது அவனுக்கு 12 வயது. யுத்தத்தின் பாதிப்புக்கும் முகம் கொடுக்க வில்லை.
மாணவனின் உறவினர்கள் எவரும் அரசியல் கைதிகளாகவும் இல்லை இவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவனுக்கு இவ்வாறன சிந்தனை வந்தது என்பது தெரியவில்லை. என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆங்கில வார்த்தைகளை எழுதிய போது அந்த வார்த்தைகள் இன்னொரு தாளில் எழுதியதைப் பார்த்து எழுதியதாகவே தோன்றுகின்றது. மற்றைய வார்த்தைகள் தொடர்ச்சியாக எழுதிய பின்னர் இந்த ஆங்கில சொற்கள் பார்த்து எழுதப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிகின்றது.
அத்துடன் அரசியல் கைதிகளுக்காக நான் உயிரைத் தியாகம் செய்கின்றேன் என்றோ அல்லது தற்கொலை செய்கின்றேன் என்றோ எந்த ஒரு வார்த்தையும் அதில் காணப்படவில்லை. ஆகவே இவனது மரணம் மிகவும் சந்தேகப்படும்படியாக அமைந்துள்ளது.
சிறையில் வாடும் எமது உறவுகளை விடுவிப்பதற்கா எந்தவித அகிம்சைச் செயற்பாடுகளில் ஈடுபட்டாவது அவர்களை வெளியே கொண்டுவரவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும்.
இதே வேளை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த அரசியல்கைதிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதி மொழியை அடுத்து (இவ்வாறு ஏற்கனவே அவர்கள் பல உறுதி மொழி கொடுத்துள்ளார்கள்) தமது உண்ணாவிரத்தைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்களே தமது உயிரின் பெறுமதியை அறிந்து கொண்டுள்ளார்கள்.
ஆனால் இளவயதில் இந்த மாணவன் தனது சுயமான போக்கில் இவ்வாறு முடிவெடுத்திருந்தால் அவனது முடிவு முழு முட்டாள் தனமானதாகும். இவ்வாறு முட்டாள் தனமாக தன்னிச்சைப் போக்கில் உயிரை மாய்ப்பது கேடு கெட்ட செயல்.
இந்த மாணவனை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தற்கொலை செய்வதற்கு யாராவது துாண்டி தற்கொலை செய்ய முற்பட்டிருந்தால் அவர்கள் துாக்கில் தொங்கப்பட வேண்டியவர்கள்.
அது யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். குறித்த மாணவனை மூளைச் சலவை செய்தவர்கள் நிச்சயம் தமிழ்த்தேசியபற்றுள்ளவர்களாக இருக்க முடியாது.
அவர்கள் ஒரு தந்தைக்குப் பிறக்காதவர்களாக இருக்கலாம். ஏனெனில் அடுத்தவனை சாகவிட்டு தமக்கு அரசியல் லாபம் தேட முற்படுபவர்கள் நிச்சயம் இந்த மண்ணில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சில வேளைகளில் இது குடாநாட்டில் குழப்பத்தை விளைவிப்பதற்காக தீய சக்திகள் மேற்கொண்ட திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம். ஏற்கனவே வித்தியா கொலை வழக்கிலும் இவ்வாறே சில சக்திகள் புகுந்து கொண்டு குடாநாட்டை குழப்பியது நினைவில் இருக்கலாம். இவ்வாறான சக்திகளால் யாழ் பல்லைக்கழகத்தினுள்ளும் சில மாணவர்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆகவே குறித்த மாணவனின் மரணத்தையிட்டு உணர்ச்சிவசப்படாது இவனது மரணத்தை பற்றி ஆழமான விசாரணைகளை நடாத்தி இவனது மரணத்திற்கு வழி வகுத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முன்வர வேண்டும்.
தற்போது எம் முன்னால் நிற்கும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் யாரும் உத்தமர்கள் அல்ல என்பதை எமது சமூகம் நுாறுக்கு நுாறுவீதம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமக்கான சரியான தலைமைத்துவம் வரும்வரை நாம் யாரையும் பலி கொடுக்காது யாருடைய பொய் தேசியக் குமுறல்களையும் காதில் எடுக்காது இருப்பது மிக மிக அவசியமாகும்