வழக்கில் தண்­டிக்கப்பட்டு கடந்த 24 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் ஏழு பேரின் தலை­யெ­ழுத்து இன்னும் சரி­யாக ஏழு நாட்­களில் முடி­வா­கி­விடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

குற்­ற­வா­ளிகள் என தெரி­விக்­கப்­படும் 7 பேரும் விடு­த­லை­யா­னவர்­களா அல்­லது தங்க­ளது வாழ்­நாளின் எஞ்­சிய நாட்­களை சிறையிலேயே­ கழிக்கப் போகி­றார்­களா என்­பது எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திக­திக்குள் முடி­வாகப் போகி­றது.

காரணம் இந்த எழு­வ­ரையும் விடு­தலை செய்ய ஜெய­ல­லிதா அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்­திய அரசு தாக்கல் செய்த மனுக்­களின் மீதான விசா­ரணை கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி முடிந்து விட்­டது.

ஐந்து நீதி­ப­திகள் கொண்ட அர­சியல் சாசன அமர்வு இம்­ம­னுக்­களை விசா­ரித்­தது. அமர்­வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதி­பதி ஹெச். எல்.தத்து டிசம்பர் 2 ஆம் திகதி ஓய்வு பெறு­கிறார்.

ஆகவே அதற்கு முன்­பாக தீர்ப்பை அர­சியல் சாசன அமர்வு அளிக்க வேண்டும் என்­பது தவிர்க்க முடி­யா­தது. இந்த அமர்வின் மற்ற நீதிபதிகள் ஃபகீர் முகம்­மது இப்­ராஹிம் கலிஃ­புல்லா, பினாகி சந்­திர கோஸ், அபய் மனோஹர் சப்ரே மற்றும் உதய் உமேஷ் லலித். ஆகியோராவர்.

ஆகவே ராஜீவ் கொலை வழக்கில் தண்­டனை பெற்ற முருகன், சாந்தன், பேர­றி­வாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெய­குமார் மற்றும் ரவிச்சந்­திரன் ஆகிய ஏழு பேரின் விதி நீதி­பதி தத்து தலை­மை­யி­லான அமர்வின் கையில்தான் தற்­போது உள்­ளது.

2014 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 18 ஆம் திகதி அப்­போ­தைய தலைமை நீதி­பதி பி.சதா­சிவம் தலை­மை­யி­லான அமர்வு ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரின் விடு­தலை தொடர்­பாக சம்பந்­தப்­பட்ட அர­சுகள் உரிய முடி­வுகள் எடுக்­கலாம் என்று கூறி­யது.

அதற்­கி­ணங்க தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா மறு­நாளே தமி­ழக சட்­ட­ச­பையில் ஒரு அறி­விப்பை வெளி­யிட்டார். ‘ராஜீவ் கொலை வழக்கில் தண்­டனை பெற்ற ஏழு பேரையும், உச்ச நீதி­மன்ற வழி­காட்­டு­தலின் படி விடு­தலை செய்ய எனது தலை­மையில் இன்று காலையில் கூடிய அமைச்­ச­ரவை முடிவு செய்து விட்­டது.

இவர்கள் மத்­திய அரசு சட்­டங்­களின் படியும், மத்­திய புல­னாய்வு அமைப்­பான சி.பி.ஐ. மூல­மா­கவும் விசா­ரிக்­கப்­பட்­டதால் இந்த விவகாரத்தில் மூன்று   நாட்­க­ளுக்குள் உரிய முடி­வெ­டுக்­கு­மாறு மத்­திய அரசைக் கோரு­கிறோம்.

இந்த மூன்று நாட்­க­ளுக்குள் இவர்­களின் விடு­த­லையை மத்­திய அரசு உறுதி செய்யா விட்டால் எனது தலை­மை­யி­லான அரசு இந்த ஏழு பேரையும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­து­விடும்,’ என்று அறி­விப்பு வெளி­யிட்டார்.

இந்த அறி­விப்பால் கடும் கோப­ம­டைந்த அப்­போதைய, மன்­மோகன் சிங் தலை­மை­யி­லான காங்­கிரஸ் அர­சாங்கம், பெப்­ர­வரி 21 ஆம்திகதி உச்ச நீதிமன்­றத்தில் ஒரு அவ­சர பொதுநல மனுவைத் தாக்கல் செய்­தது.

இதனை ஏற்ற உச்ச நீதி­மன்றம் இந்த எழு­வ­ரையும் விடு­விக்கும் தமி­ழக அரசின் உத்­த­ர­வுக்கு இடைக்­காலத் தடை விதித்­தது விசாரணையை மூன்று நீதி­ப­திகள் அமர்­வுக்கு மாற்­றி­யது.

இதன்­படி ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு வழக்கை விசா­ரித்த நீதி­பதி சதா­சிவம் தலை­மை­யி­லான மூன்று நீதி­ப­திகள் அமர்வு பேர­றி­வாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்­ட­னையை இரத்து செய்­த­ததை உறுதி செய்­த­துடன்,

இந்த எழு­வரின் விடு­த­லையில் பல்­வேறு வித­மான அர­சியல் சாசன மற்றும் சட்ட விவ­கா­ரங்கள் மற்றும் குடி­ய­ரசுத் தலைவர், ஆளுநர் மற்றும் உச்ச நீதி­மன்றம் ஆகி­ய­வற்றின் அதி­கார வரம்­புகள் நிர்­ண­யிக்­கப்­பட வேண்­டி­யி­ருப்­பதால் விவ­கா­ரத்தை ஐந்து நீதி­ப­திகள் கொண்ட அர­சியல் சாசன அமர்­வுக்கு மாற்­று­வ­தாகத் தெரி­வித்து விட்­டது.

ஐந்து நீதி­ப­திகள் கொண்ட அர­சியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 12 ஆம் திகதி விசா­ர­ணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்­துள்­ளது.

இந்­நி­லையில் மாநில அர­சுக்கு அவர்­க­ளது விடு­தலை தொடர்பில் முடி­வெ­டுக்கும் அதி­காரம் உள்­ள­தாக உச்ச நீதி­மன்­றத்தில் பல மாநில அர­சுகள் வாதிட்­டன. ஆயி­னும் ­மத்­திய அரசு எழு­வரின் விடு­த­லையை கடு­மை­யாக எதிர்த்­தது.

ராஜீவ் காந்தி கொலை­யென்­பது இந்­திய இறை­யாண்­மையின் மீதான கொடூரத் தாக்­குதல் என்றும் இதில் அப்­பாவி பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதி­கா­ரிகள் பலரும் கொல்லப்பட்­டனர் என்றும் ஆகவே எழு­வரின் விடு­த­லையை அனு­ம­திக்க முடி­யா­தென்றும் வாதிட்­டது.

மேலும் முருகன், நளினி, சாந்தன் மற்றும் பேர­றி­வாளன் ஆகி­யோரின் மரண தண்டனையானது ஏற்கனவே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டதால் அவர்கள் மேலும் சலுகையை எதிர்பார்க்க முடியாதென்றும் கூறியது.

இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் அரசின் நிலைப்பாடும், மோடி அரசின் நிலைப்பாடும் ஒன்றுதான் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விரைவில் இவ் வழக்கின் தீர்ப்பு வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version