ஆடொன்றும் , புலியொன்றும் ஒன்றாக இருக்க முடியுமா ? இது சாத்தியமா …..? ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று ஆடொன்றுடன் நெருங்கிய நட்பை கொண்டுள்ளது. ஆட்டின் பெயர் ‘டிமுர்’ புலியின் பெயர் ‘ஆமுர்’ இவர்களின் நட்பு மிருகக்காட்சிசாலையில் ஏற்ப்பட்டுள்ளது.

ரஷ்­யாவில் புலி­யொன்­றுக்கு உண­வாக அனுப்­பப்­பட்ட உயி­ருள்ள ஆடொன்றை அப்­புலி தனது நண்­ப­னாக்கிக் கொண்­டுள்­ளது.

1351311ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தில் ஜப்­பா­னிய கடல் மற்றும் வட­கொ­ரி­யா­வு­ட­னான எல்லைப் பகு­தி­யி­லுள்ள மிரு­கக்­காட்சி சாலை­யொன்றில் இப்­புலி உள்­ளது.

அமுர் என அழைக்­கப்­படும் இப்­பு­லிக்கு உண­வாக உயி­ருள்ள ஆடு ஒன்றை ஊழி­யர்கள் அனுப்­பினர். இந்த ஆட்டை இப்­புலி வழக்கம் போல வேட்­டை­யாடி உட்­கொள்ளும் என ஊழி­யர்கள் கரு­தினர்.


ஆனால், அந்த ஆட்டை கொல்­வ­தற்குப் பதி­லாக அத­னுடன் நட்­பாக பழக ஆரம்­பித்­தது புலி.

“ஆடு­க­ளையும் முயல்­க­ளையும் எப்­படி வேட்­டை­யா­டு­வது என்­பதை இப்­புலி நன்­றாக அறிந்­துள்­ளது.

ஆனால், இந்த ஆட்டை வேட்­டை­யா­டு­வ­தற்கு இப்­புலி மறுக்­கி­றது. தைமூர் என பெய­ரி­டப்­பட்ட இந்த ஆடும் புலியும் நண்­பர்­க­ளாக விளங்­கு­கின்­றமை எமக்கு பெரும் வியப்­ப­ளிக்­கி­றது” என இம்­மி­ரு­கக்­காட்சி சாலையின் ஊழியர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஆட்டின் அருகில் ஊழி­யர்கள் யாரும் சென்றால், எச்­ச­ரிக்கும் விதத்தில் புலி உறு­மு­கி­றது. இதற்­குமுன் ஊழி­யர்­க­ளிடம் இப்­புலி இவ்­வ­ளவு ஆக்­ரோ­ஷ­மாக நடந்­து­கொண்­ட­தில்லை” எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இப்­பு­லியும் ஆடும் நட்­புடன் பழ­கு­கின்­ற­போ­திலும், ஆட்டின் பாது­காப்பு கருதி அதை புலி­யி­ட­மி­ருந்து பிரிக்க வேண்டும் என மிரு­கக்­காட்சி சாலை அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஆனால், ஆட்டை பாதுகாக்கும் வகையில் புலி செயற்படுவதால் இவ்விரு மிருகங்களையும் பிரிப்பது கடினமானது என மேற்படி ஊழியர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version