பாணந்துறையில் புகையிரதம் வரும் வேளையில் அதன் முன் நிற்கும் நபரொருவர் தொடர்பான காணொளி இணையத்தில் வலம் வருகின்றது.
ஆரம்பத்தில் தைரியமாக நிற்கும் அவர் புகையிரதம் அருகே நெருங்கியதும் தண்டவாளத்திலிருந்து வெளியே பாயந்து செல்வதும் அருகில் உள்ள வீடொன்றின் சி.சி.டிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் போது சாரதி ஒருவாறு புகையிரதத்தை நிறுத்துவதும் சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.
மேலும் இதன்போது குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.