ரஷ்­யாவின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஒக்­ஸனா பொப்­ரோவ்ஸ்­க­யாவும் அவரின் கண­வரும் கார் குண்­டு­வெ­டிப்பில் கொல்லப்பட்­ட­போது ஒக்­ஸ­னாவை அவரின் கணவர் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தி­ருந்தார் என ரஷ்ய ஊட­கங்கள் தெரிவித்துள்­ளன.

30 வய­தான ரஷ்ய எம்.பி. ஒக்­ஸனா பொப்­ரோவ்ஸ்­க­யாவும் 28 வய­தான அவரின் கணவர் நிகிட்டா பொப்­ரோவ்ஸ்­கியும் ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­திய நக­ரான நோவோஸ்­பி­ரிஸ்கில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வத்­தை­ய­டுத்து அவர்­களின் வாக­னத்­தி­லி­ருந்து சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டனர்.

இவர்கள் இரு­வ­ரி­னதும் சட­லங்கள் வாக­னத்­துக்குள் அரை­நிர்­வாண நிலையில் காணப்­பட்­டன.

குண்­டு­வெ­டித்­த­போது இவர்கள் பாலியல் உறவில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தி­ருக்­கலாம் என முன்னர் கரு­தப்­பட்­டது.

ஆனால், தனக்கு துரோகம் இழைத்­த­தாக கரு­தப்­பட்ட மனைவி ஒக்­ஸ­னாவை அவரின் கணவர் நிகிட்டா பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என ரஷ்ய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

13532oksana258963ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினின் ஐக்­கிய ரஷ்யா கட்­சியை சேர்ந்­தவர் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒக்­ஸனா பொப்­ரோவ்­கயா. கவர்ச்­சி­யான தோற்றம் கொண்ட அவர் தனது குடும்­பத்­தி­ன­ரதும் புகைப்­ப­டங்­களை அடிக்­கடி சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு வந்தார்.

ஆனால், நிகிட்­டா­வுக்கும் ஒக்­ஸ­னா­வுக்கும் இடை­யி­லான குடும்ப வாழ்வில் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

செல்­வந்தர் ஒரு­வ­ருடன் ஒக்­ஸ­னா­வுக்கு பாலியல் தொடர்பு இருப்­ப­தாக நிகிட்டா குற்றம் சுமத்தி வந்தார்.

இந்­நி­லை­யி­லேயே கடந்த வியா­ழக்­கி­ழமை நோவோஸ்­பிரிஸ்க் நகரில் தமது காரில் வைத்து, தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு ஒக்­ஸ­னாவை நிர்ப்­பந்­தித்­து­விட்டு கிர­னேட்டை வெடிக்க வைத்து தான் நிகிட்டா தற்­கொலை செய்­து­கொண்­ட­துடன் தனது மனைவியைக் கொலை செய்ய திட்­ட­மிட்­டி­ருக்­கலாம் என ரஷ்ய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

கிரனேற் வெடித்­த­போது நிகிட்­டா­வுக்கும் ஒக்­ஸ­னா­வுக்கும் இடையில் பாலியல் உறவு பரஸ்­பர சம்­ம­தத்­துடன் நடை­பெற்­ற­தாக தெரி­ய­வில்லை என ரஷ்­யாவின் ‘லைவ்’ நியூஸ் எனும் ரஷ்ய ஊடகம் தெரி­வித்­துள்­ளது.

நிகிட்டா, ஒக்­ஸனா தம்­ப­திக்கு 4 வய­தான ஒரு மகள் உண்டு. ஆனால், அச்­சி­றுமி இச்­சம்­ப­வத்தில் பாதிக்­கப்­ப­ட­வில்லை. அவள் தற்­போது தனது பாட்­டி­யிடம் வசித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி சம்­ப­வத்தில் குண்டு வெடித்த சத்தம் தமக்கு கேட்­ட­தாக அரு­கி­லி­ருந்த குடி­யி­ருப்புத் தொகு­தியில் வசிக்கும் மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்தச் சத்தம் எதனால் ஏற்­பட்­டது என்­பது தெரி­யாத நிலையில், துருக்­கி­யு­ட­னான யுத்தம் ஆரம்­ப­மா­கி­விட்­டது போலும் என தனது கண­வ­ரிடம் தான் வேடிக்­கை­யாக கூறி­ய­தாக பெண்­ணொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.

நோவோஸ்­பிரிஸ்க் நகர மேயர் அன­டோலி லோகொட் இது தொடர்­பாக கூறுகையில், ‘இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல, இது ஒரு குடும்ப சர்ச்சை. ஆனால், இக்கணவரின் பொறாமையைத் தூண்டிய விடயம் எது எனத் தெரியவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸனாவின் கணவர் நிகிட்டா ரஷ்ய இராணுவத்தின் விசேட சேவைப் பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version