அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி புகையிரதம் பாய்ந்து தற்கொலை செய்த மாணவனின் கடிதத்தை பிரதி (போட்டோ கொப்பி) எடுத்த குற்ற சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலேந்திரன் பிரகாஸ் (வயது 23) எனும் இளைஞனே கோப்பாய் பொலிசாரினால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26ம் திகதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி தனது படக்கொப்பியில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு புகையிரதம் முன்பாக பாய்ந்து கொக்குவில் இந்து மாணவனான இ. செந்தூரன் தற்கொலை செய்து கொண்டான்.

குறித்த மாணவன் தனது பாடக்கொப்பியில் எழுதிய கடிதத்தினை அங்கிருந்த சிலர் மீட்டு அதனை பிரதி(போட்டோ கொப்பி) எடுத்துக்கொண்டனர்.

அது தொடர்பிலையே குறித்த இளைஞர் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
santhu-01

Share.
Leave A Reply

Exit mobile version