மழையால் கோயிலில் வெள்ளம் புகுந்த நிலையில் சாமி சிலை தலைமீது பாம்பு ஏறி உட்கார்ந்து தன்னை காத்துக்கொண்டதாக எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.
சென்னையடுத்த மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்துவரும் கனமழையால், கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் நின்ற சாமி சிலையின் கழுத்து அளவுக்கு நீர் ஓடிக்கொண்டுள்ளது.
இந்நிலையில், சாமி சிலை தலை மீது பாம்பு ஒன்று ஏறி உட்கார்ந்தபடி வெள்ளத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளது. இந்த படம், வாசுதேவன் என்பவரால் எடுக்கப்பட்டு, டிவிட்டரில் பதியப்பட்டு, தற்போது வைரலாக பரவி வருகிறது.
பாம்பு தன்னை காத்துக்கொள்ளும்போது, மனிதர்களாக நாம் நம்மை காப்பாற்ற வழி கிடைக்கும் என்று உணர்த்துவதை போல இந்த படம் அமைந்துள்ளது.