யாழ். – புங்குடுதீவு பகுதியில் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த சிறுமியை தொடர்ச்சியாக இரு தடவைகள் அவரது தந்தை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிலிருந்து தெரிய வந்துள்ளது.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.