தனது மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கணவர் புத்தளம் – இஹல கடுனேரிய பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், பின் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட காவற்துறையினர், தப்பிச்சென்ற கணவரை இஹல கடுனேரிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
28 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.இவர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கணவனும் , மனைவியும் கருத்து வேறுபாட்டின் பின்னர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் கணவன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ள போதிலும் அதற்கு மனைவி மறுக்கவே இக்கொலை இடம்பெற்றுள்ளது.
கணவனும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.