தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வதில் சட்டம் ஒரு பிரச்­சி­னை­யா­கவோ அல்­லது தடை­யா­கவோ இருப்­ப­தாகத் தெரியவில்லை. மாறாக அர­சியல் ரீதி­யி­லான பிரச்­சி­னையே அவர்­களின் விடு­த­லைக்கு

தடை­யாக இருக்­கின்­றது என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் நேற்று சபையில் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மா­னது மிகவும் கொடூ­ர­மா­னது என்­பதை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அச்­சட்டம் உடன­டி­யாக நீக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­திய எதிர்க்­கட்சித் தலைவர் இப்­ப­டி­யா­ன­தொரு சட்­டத்தின் கீழ் விசா­ர­ணை­களின்றி தமிழ் அர­சியல் கைதி­க­ளாக தடுத்து வைத்­தி­ருப்­பது எந்த அடிப்­ப­டையில் நியாயம் என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் அமைச்­சுக்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பி­லான குழு நிலை விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் இங்கு மேலும் உரையாற்றுகையில்

தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பது பார­தூ­ர­மான பிரச்­சி­னை­யாக இருந்து வரு­கின்­றது. அவர்கள் விடுதலை செய்­யப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தல்கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அது இடம்­பெ­றாத கார­ணத்தால் எமது மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து காணப்­ப­டு­கின்­றனர்.

அமை­யப்­பெற்­றுள்ள புதிய அர­சாங்கம் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. துரி­த­மாக எத­னையும் செய்­வ­தற்கு முற்­ப­ட­வில்லை.

இவர்­களின் விடு­தலை பாது­காப்­புக்கு ஆபத்து என்று கூறப்­ப­டு­கி­றது. எனினும் அது தவ­றாகும். வடக்கு- கிழக்கு மக்கள் தெற்­குடன் இணைந்து வாழவே விரும்­பு­கின்­றனர்.

வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் சுதந்­தி­ர­மா­கவும் சமா­தா­ன­மா­கவும் அதே நேரம் உறு­தி­யு­டனும் வாழ்­வ­தற்கே விரும்­பு­கின்­றனர். இப்படியான எண்­ணங்கள் அவர்­க­ளி­டத்தில் இருக்­கின்ற போதிலும் அங்கு எமது மக்கள் ஓரம் கட்­டப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருந்து வருகின்றனர்.

வடக்கு- கிழக்கு எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், எமது மக்­களின் நிலைப்­பா­டுகள் விட­யத்தில் அர­சாங்கம் துணி­க­ர­மாக செயற்படவேண்டும் என்று நான் வலி­யு­றுத்­து­கிறேன். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை விவ­கா­ரத்தில் இந்­நி­லையை அர­சாங்கம் கடைப்­பி­டிக்க வேண்டும்.

ஜே.வி.பி.யின­ருக்கு பிரச்­சினை இருந்­தது. அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் பிணக்கு இருந்­தது. அதனால் அவர்கள் கிளர்ச்­சியில் ஈடுபட்டனர். ஆயுதம் ஏந்­தினர்.

எனினும் கைது செய்­யப்­பட்ட ஜே.வி.பி.யினர் பிற்­கா­லத்தில் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி பொலிஸ் நிலை­யங்­களைத் தாக்கி அரச வளங்­க­ளுக்கு சேதங்­களை விளை­வித்த அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். ஆனாலும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­த­லையில் மாத்­திரம் அர­சாங்கம் தயக்கம் காட்­டி­வ­ரு­வது ஏன் என்­பது எமக்குப் புரி­ய­வில்லை.

புலிகள் அமைப்பில் இருந்­த­வர்கள், ஆயுதம் ஏந்திப் போரா­டி­ய­வர்கள் கூட இன்று விடு­தலை செய்­யப்­பட்டு சமூ­கத்­துடன் இணைக்கப்பட்டுள்­ளனர். அப்­ப­டி­யானால் அர­சியல் கைதி­க­ளாக தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களை விடு­தலை செய்­யா­தி­ருப்­பது எவ்­வாறு நியா­ய­மாகும்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் என்­பது மிகவும் கொடூ­ர­மா­னது என்றும் அது நீக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அதே­நேரம் அச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணை­க­ளின்றி இருந்து வரும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் மனித உரி­மைகள் பேர­வையே வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அது மாத்­தி­ர­மின்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது மிகவும் கொடூ­ர­மா­னது என்­பதை இன்­றைய அரச தரப்­பி­னரே கூறி­யி­ருக்­கின்­றனர். அப்­ப­டி­யானால் அதனை நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காது நீடித்து வைத்­தி­ருப்­பது ஏன் எனக் கேட்க விரும்­பு­கிறேன்.

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காது அவர்­களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்­தி­ருப்­ப­தா­னது சட்டப்பிரச்சினை­யுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­றது.

மாறாக இது ஒரு அர­சியல் ரீதி­யி­லான பிரச்­சி­னை­யா­கவே பார்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே சட்­டத்­து­றை­யுடன் அல்­லது அர­சியல் தேவை கரு­திய வகையில் தமிழ் அர­சியல் கைதி­களை தொடர்ந்தும் தடுத்து வைத்­தி­ருப்­பதை எம்மால் அனு­ம­திக்க முடி­யாது.

யுத்­தத்தை முன்­னின்று நடத்தி முடித்து வைத்த பீல்ட் மார்சல் சரத் பொன்­சே­காவும் தமிழ் அர­சியல் கைதி­களை தடுத்து வைத்­தி­ருக்க வேண்டாம் என்றும் அவர்­களை விடு­தலை செய்­யு­மாறும் கேட்­டுள்ளார்.

புலிகள் அமைப்பு ஒடுக்­கப்­பட்­டு­விட்­டது. இன்று இந்­நாட்டில் புலிகள் இல்லை என்­பது புரிந்து கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். தமிழ் மக்கள் ஒவ்­வொரு தேர்­தலின் போதும் தமது நிலைப்­பா­டு­களை மிகத் தெளி­வா­கவே வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்­றனர்.

ஆகையால் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டு­களை புரிந்­து­கொள்­ளு­மாறு அர­சாங்­கத்­திடம் மிகவும் வின­ய­மாகக் கேட்­டுக்­கொள்­கிறேன்.

34 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேருக்கு புனர்வாழ்வு வழங்கப்படவுள்ளது. இருப்பினும் இவர்கள் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன.

217 பேர் அரசியல் கைதிகள் எனும் போது 17 பேர் தொடர்பான வழக்குகளே இருந்து வருகின்றன. இதுதொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பயங்கரவாதச் சட்டம் கொடூரமானது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகின்ற அரசாங்கம் அதனூடாக கைது செய்யப்பட்டவர்களை எந்த அடிப்படையில் தடுத்து வைத்திருக்க முடியும். அவர்கள் குற்றவாளிகள் என்றால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version