தன்னைத் தாக்கி தின்ன வந்த பசி மிகுந்த முதலையிடமிருந்து யானைக்குட்டி போராடித் தப்பிய காட்சி ( புகைப்படத் தொகுப்பு)

2F23FA6B00000578-3349546-image-a-1_1449502831652

 எந்தக் கவலையும் இல்லாமல் , அந்த சேறு மிகுந்த நீரில் என்ன ஆபத்து மறைந்திருக்குமோ என்று தெரியாமல் அது விளையாடிக்கொண்டிருந்தது என்கிறார்


இந்தக் குட்டியானை முதலைக்கு உணவாகியிருக்கும் – அதிருஷ்டவசமாகத் தப்பியது

இந்த பயங்கரமான தருணத்தைப் படமெடுத்தார் ஜிம்பாப்வே விவசாயி, பிரான்ஸுவா பார்மேன்


இந்த யானைக்குட்டி ஜிம்பாப்வேயின் ஜாம்பெஸி பள்ளத்தாக்கில் மானா பூல்ஸ் என்ற இடத்தில் நீர் நிலை ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தது.

இது தண்ணீர் குடிக்கத்தான் வந்திருக்கவேண்டும், ஆனால், அது வேகமாக குளத்துக்குள் ஓடிவந்து, தண்ணீரைப் பார்த்த குஷியில் , ஆழமற்ற அந்த நீர் நிலையில் விழுந்து புரண்டு விளையாட ஆரம்பித்தது என்கிறார் பார்மேன்

திடீரென்று, அந்த முதலை , அந்த யானைக் குட்டியின் மீது பாய்ந்து, அதன் துதிக்கையைப் பிடித்துக் கடிக்க ஆரம்பித்தது என்கிறார் அந்த விவசாயி

முதலையின் பிடியில் திணறிய அந்த யானைக்குட்டி, சிறிது நேரம் ஸ்தம்பித்து விட்டது. ஆனால் சுதாரித்துக்கொண்டு, உறுதியுடன் போராட ஆரம்பித்தது. ஏறக்குறைய முதலையை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்துவிட்டது அந்த யானைக்குட்டி. பிறகு மற்ற யானைகள் ஒன்று திரண்டு அந்த முதலையை நோக்கிப் பாய்ந்த நிலையில், முதலை அந்த யானைக்குட்டியை விட்டுவிட்டது என்கிறார் அவர்

பிறகு அந்த குட்டி யானை தள்ளாடியபடி பின்னே சென்று ஆபத்திலிருந்து தப்பியது. முதலையும் சேற்றுத் தண்ணீருக்குள் சென்று மறைந்தது.

தாய்மையின் வலி: சேற்றில் சிக்கிய குட்டியை போராடி மீட்ட யானை: வைரல் வீடியோ..!!
07-12-2015

பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி மேலே வர முடியாமல் போராடும் நிலையில் அதன் தாய் போராடி தன் குட்டியை மீட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவில் இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது

 

Share.
Leave A Reply

Exit mobile version