அளவெட்டி பகுதியில் மதுப் போதையில் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு நச்சருந்திய நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
சிவஞானம் ஞானபிரகாசம் என்ற 46 வயது நிரம்பிய இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நஞ்சு மருந்தை உட்கொண்ட அவரை உறவினர்களும்,அயலவர்களும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட போதும் அவர் அதற்கு இணங்கவில்லை. இதனையடுத்து நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்து குறித்த நபர் பலவந்தமாக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக நேற்று பிற்பகல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சிவஞானம் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.