கடையில் கணக்குப் பார்க்கும் யுவதி கணக்கில் தவறு விட்டமைக்காக அவரை வீட்டுக்குச் செல்லவிடாமல் கடைக்குள் வைத்து உரிமையாளர் பூட்டிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலி சந்தியிலுள்ள கடையொன்றில் கணக்காளராக பணியாற்றி வரும் குறித்த யுவதி, கணக்குப் பார்க்கும் போது, 3 இலட்சம் ரூபாய் பணத்துக்கான கணக்கை தவறவிட்டதையடுத்து, ஆத்திரம் கொண்ட உரிமையாளர், யுவதியை கடைக்குள் வைத்துப் பூட்டியுள்ளார்.
இரவு நேரம் ஆகியும் தனது மகள் வீடு திரும்பாததையடுத்து கடைக்குச் சென்ற தாயார், கடையின் மேல் மாடியிலிருந்து தனது மகளின் குரல் கேட்டதையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர்களின் உதவியுடன் கடையை முற்றுகையிட்டார்.
இளைஞர்கள், கடைக்குள் செல்ல முற்பட்ட வேளையில், கடை உரிமையாளர் அடைத்து வைத்திருந்த யுவதியை விடுவித்தார்.
விபத்து ஏற்படாமல் எப்படி? Video
09-12-2015

இப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக கடந்த மாதம் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.