பல பிரமாண்டமான திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சங்கர்.
அவரது திரை உலக ஆரம்ப காலத்தில் இயக்குனர் சந்திர சேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது சீதா என்ற திரைப்படத்தில் நடிகர் ஜனகராஜ் உடன் சங்கர் நடித்துள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதனை நீங்களே பாருங்கள்.
கோடிகளில் படம் எடுக்கும் சங்கர்: வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தது என்னமோ இவ்வளவுதான்!
நடிகை ஹன்சிகா 15 இலட்சம் கொடுத்தார், ஸ்ரீதிவ்யா 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இன்னும் பலரும் நிவாரணத்தொகைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தெலுங்குநடிகர்கள் தனித் தனியாகக் கொடுத்தது போக வசூலும் செய்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் அதுவும் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் ஷங்கரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அவர் இவ்வளவு கொடுத்தார், இவர் இவ்வளவு கொடுத்தார் என்று உறுதிப்படுத்தப்படாத பல செய்திகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஷங்கர் பத்துஇலட்சம் கொடுத்ததை ஊடகங்களுக்குச் செய்தியாகக் கொடுத்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் இயக்குனர்களில் ஒருவர் சங்கர் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது
ரஜினிமுருகன் டைட்டில் பாடலின் காணொளி வெளியீடு
ரஜினி முருகன் திரைப்படம் சில காலங்களுக்கு பின்னர் டிசம்பர் 4 ஆம் திகதி வெளியாக இருந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த திரைப்படத்தின் வெளியீடு பிற்போடப்பட்டது.
எனினும் வரும் 11 ஆம் திகதி வெளியீடு செய்யப்படும் என்று கூறுப்படுகின்றது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அந்த திரைப்படத்தின் டைடில் பாடலின் காணொளி வெளியீடு செய்யப்பட்டுள்ளது