புனித மக்காவில் இவ்வருடம் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2411 என எசோசியேட் பிரஸ்ஸை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நெரிசலில் சிக்கி 769 பேர் இறந்ததாக சவுதி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது 2411 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இறப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதை 3 மாதங்களுக்கு பிறகு சவுதி அரசு அதிகாரிகளும் ஒப்புகொண்டு உள்ளனர்.என இந்த நெரிசலில் சிக்கி 769 பேர் இறந்ததாக சவுதி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.
என எசோசியேட் பிரஸ்ஸை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது பிராந்தியத்தில் போட்டி நாடான ஈரானின் விமர்சனத்தை ஏற்காமல் மற்ற நாடுகளின் முயற்சிகளோடு மரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதில் மிகவும் பாதிக்கபட்டது ஈரான் ஹஜ் பயணிகள், இதில் 464 ஈரானை சேர்ந்தவர்கள் பலியானார்கள். மாலி நாடு தனது நாட்டைச் சேர்ந்த முஸ்லீம்கள் 305 பேர் பலியானதாக கூறி உள்ளது. நைஜிரீயா நாடு 274 பேரும் எகிப்து 190 பேரும் பலியானதாக கூறி உள்ளது.
பங்களாதேஷ் சேர்ந்தவர்கள் 137 பேரும், இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் 129 பேரும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 120 பேரும், கெமரூனை சேர்ந்தவர்கள் 103 பேரும், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் 102 பேரும், நிஜரை சேர்ந்தவர்கள் 92 பேரும், செனகலை சேர்ந்தவர்கள் 61 பேரும், எத்தோப்பியாவைச் சேந்தவர்கள் 53 பேரும்,
ஐவரி கோஸ்டை சேர்ந்தவர்கள் 52 பேரும், பெனனியை சேர்ந்தவர்கள் 50 பேரும், அல்ஜிரியாவை சேர்ந்தவர்கள் 46 பேரும் மேலும் சாட்-43, மொராகோ-42, சூடான்-30,தன்சானியா-25, புர்கினா பாசோ-22, கென்யா-12,சோமாலியா10, கானா, துனிசியா,துருக்கி தலா 7 பேர் லிபியா மியான்மர்-6 சீனா-4 ஆப்கானிஸ்தான், திஜிபோடி காம்பியா,ஜோர்டான் தலா- 2 பேர், லெபனான்,மலேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தலா 1- 2 பேரும் பலியானவர்களில் அடங்குவர். என தகவல் வெளியாகியுள்ளன.