மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள குலாரிபூர் கிராமத்தை சேர்ந்த குஷ்பூ என்ற பெண்ணுக்கும், ஒரியா மாவட்டத்தை சேர்ந்த ஓம்வீர் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை இரவு திருமணச்சடங்குகள் தொடங்கியுள்ளன. திருமணச்சடங்குகளில், மாப்பிள்ளைக்கு சில மந்திரங்கள் சொல்லத் தெரியவில்லையாம்.
திருமணத்திற்கு வந்த தோழி ஒருவர், படிக்காத மாப்பிள்ளையை கட்டிக் கொள்ள போகிறாயா? என குஷ்பூவிடம் கேட்டதாகத் தெரிகிறது.
ஆனால் பலனளிக்கவில்லை. தொடர்ந்து மணப்பெண் குஷ்பூ, மாப்பிள்ளை ஓம்வீரிடம் சில நாணயங்களை கொடுத்து எண்ண சொல்லியுள்ளார். ஓம்வீருக்கு 9க்கும் மேல் எண்ணத் தெரியவில்லை.
79ல் இருந்து 69ஐ கழித்தால் எவ்வளவு வரும் என்ற கேள்விக்கும் மாப்பிள்ளையிடம் பதில் இல்லை. மாப்பிள்ளையின் நிலை அங்கு கூடியிருந்தவர்களுக்கு பரிதாபத்தை வரவழைத்தது.
இதையடுத்து படிக்காத மாப்பிள்ளையை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறிய மணப்பெண் குஷ்பூ, திருமணத்தை நிறுத்தி விட்டார்.
மணப்பெண்ணின் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள் சோகத்துடன் திரும்பினர்.
ஆனால் குஷ்பூ நிராகரித்த மாப்பிள்ளை ஓம்வீரை நேற்று மற்றொரு பெண் திருமணம் செய்து கொண்டார்.