யாழ். இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி மற்றும் நடத்துனரும் தனியார் வேன் சாரதி மற்றும் நடத்துனருக்கும் இடையில் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் நேற்றுக் காலை மோதல் சம்பவம் இடம்பெற்றது.
புன்னாலைக்கட்டுவன் பகுதியிலிருந்து யாழ்ப்பா ணம் சென்றுகொண்டிருந்த அரச மற்றும் தனியார் பஸ்களில் அரச பஸ் பரமேஸ் வரா சந்தி பஸ் தரிப்பிட த்தை முதலில் வந்து சேர்ந்து பயணிகளை ஏற்ற ஆயத்தமாக இருந்தவேளை அரச பஸ்ஸின் முன்னால் தனியார் பஸ் நிறுத்தப்பட்டு மக்களை ஏற்றிச் செல்ல விடாது தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனாலேயே இந்தக் கைகலப்பு ஏற்பட்டது.
குறித்த கைகலப்பின் போது பஸ் நடத்துனரின் பணம் மற்றும் டிக்கெட்டுக்கள் வீதியில் சிதறின் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் அரச மற்றும் தனியார் பஸ் சாரதி அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்ட பின்னர் இரண்டு பஸ்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.